உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இந்தியப் பிரஜைகளின் பல இலட்சம் ரூபாய் பணம் திருட்டு; இரு பெண்கள் கைது.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
140 பார்வைகள்

சம்மாந்துறை நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்த இந்தியப் பிரஜைகள் தவறவிட்ட சுமார் 31 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை ரூபாய் பெறுமதியுடைய அமெரிக்க டொலர்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் இரு பெண்கள் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு ஒன்றிற்காக இந்தியா – தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் நேற்று வியாழக்கிழமை (24) வருகை தந்திருந்தனர்.

வழக்கு விசாரணையின் போது நீதவான் கோரிய சான்றாதாரத்தைக் காட்டுவதற்காக நீதிமன்றிற்குள் நுழைவதற்கு முன்னர் கைத்தொலைபேசிகளை ஒப்படைத்து வைத்திருந்த இடத்திற்கு இந்தியப் பிரஜை ஒருவர் சென்றுள்ளார். அங்கு தனது கைத்தொலைபேசியை பெற்றுக்கொண்ட போது தான் கையில் வைத்திருந்த சுமார் 31 இலட்சம் இலங்கை ரூபாவிற்கும் அதிகமான அமெரிக்க டொலர் பணத்தைக் கொண்ட கடித உறையை அங்கே தவறுதலாக மறந்து வைத்துவிட்டு நீதிமன்றத்திற்கு திரும்பியுள்ளார்.

குறித்த வழக்கு முடிவடைந்த பின்னர் கடித உறை ஞாபகத்திற்கு வரவே உடனடியாகத் தொலைபேசியைப் பெற்று உணவகப் பகுதிக்குச் சென்று தேடியுள்ளார். எனினும் அங்குப் பணத்துடன் கூடிய கடித உறை காணப்படவில்லை. இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுடன் சட்டத்தரணி ஒருவரின் உதவியுடன் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டிற்கு அமைவாக உடனடியாகச் செயற்பட்ட சம்மாந்துறைப் பொலிஸார் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய இரு பெண் சந்தேக நபர்களைக் கைது செய்து மேலதிக விசாரணைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

அத்துடன், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) காணொளிக் காட்சிகளின் உதவியுடன் காணாமல்போன பணப்பையைக் கண்டறியும் நடவடிக்கைகளைப் பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

150 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

141 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0