உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சூழ்ச்சியால் ஆட்சியை தக்கவைக்க மாட்டோம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
151 பார்வைகள்

“சூழ்ச்சிகள் மூலம் ஆட்சியைத் தக்கவைக்கும் எண்ணம் இல்லை. மக்கள் எம்மை நிராகரித்தால் ஆட்சியைக் கைவிடுவதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.” – இவ்வாறு ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
“நாங்கள் சுயநலமாக எதையாவது அடைந்து கொள்வதற்காக ஆட்சிக்கு வரவில்லை. நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவே வந்துள்ளோம். இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாகும். எனவே, மக்கள் எங்களை நிராகரிப்பார்களாயின் நாங்கள் ஆட்சியில் தொடர வேண்டிய அவசியம் இல்லை.

கொள்ளையில் ஈடுபட்டவர்கள், சுயலாபம் தேடியவர்கள் மற்றும் மோசடிகளை மூடிமறைக்க முற்பட்டவர்களே மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க முயற்சிப்பார்கள். நாங்கள் அவ்வாறல்லர்.

விசாரணைகளில் இருந்து தப்புவதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. நாட்டுக்குச் சேவையாற்ற வந்துள்ள எமக்கு அவ்வாறான தேவைப்பாடுகள் இல்லை. அத்துடன், தேசிய மக்கள் சக்திக்கும், ஜே.வி.பி.க்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளன என்று வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

150 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

141 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0