உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க விஜித ஹேரத் நாளை நியூயோர்க் பயணம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
110 பார்வைகள்

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாளை சனிக்கிழமை நியூயோர்க் செல்கின்றார்.

எதிர்வரும் 28 ஆம் திகதி ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் உரையாற்றவுள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் 81 ஆவது அமர்வு செப்டெம்பர் 8 ஆம் திகதி தொடங்கியது. இதன் உயர்மட்ட வாரம் மற்றும் பொது விவாதம் செப்டெம்பர் 22 முதல் 28 வரை நியூயோர்க்கில் நடைபெறுகின்றது.

எதிர்வரும் 28 ஆம் திகதி நிகழ்த்தப்படவுள்ள அமைச்சர் விஜித ஹேரத்தின் உரை, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைப்பதற்கும், உலகளாவிய அரங்கில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை முன்னுரிமைகளை வெளிப்படுத்துவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று அரசியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நியூயோர்க்கில் இரு தரப்பு சந்திப்புகளிலும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார்.

குறிப்பாக சவூதி வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போது சிவராசா அனோஜன் விடயம் சம்பந்தமாகப் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற 80 ஆவது ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்று உரையாற்றியிருந்த நிலையில், இந்த ஆண்டு உயர்மட்ட வாரத்தில் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் விஜித ஹேரத் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

150 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

141 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0