உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாடாளுமன்ற வாயிலில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் விவசாய அமைப்பாளர் சாணக்க பண்டாரவுக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
121 பார்வைகள்

நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் கரும்பு விவசாயியும் சிவில் அமைப்பாளருமான சாணக்க பண்டாரவிற்கும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான காரசாரமான வாக்குவாதம் மற்றும் பதற்றமான சூழல் நிலவியது.

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த போராட்டப் பேரணி நிறைவடைந்து, அதில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரும்பாலானோர் கலைந்து சென்றதன் பின்னரே சாணக்க பண்டார தனியாக அவ்விடத்தில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தி பொதுமக்களை இங்கு திரட்டி வந்து ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சுமத்தினார்.

வழக்கமாக விவசாயிகளோ அல்லது சிவில் அமைப்புகளோ வெறும் பத்து பேருடன் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினாலும் அவர்களை முன்னோக்கிச் செல்ல விடாமல் பொலிஸார் வீதித் தடைகளைப் போட்டுத் தடுப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்க்கட்சியினரின் இந்தப் போராட்டத்திற்கு மட்டும் நாடாளுமன்ற வீதியைத் திறந்துவிட்டது ஏன் என்றும், இதன் பின்னணியில் ஏதேனும் இரகசிய அரசியல் உடன்படிக்கை உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.

இப்போராட்டம் காரணமாக பொல்தூவை சந்திப்பு மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பிரதான வீதிப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக அப்பகுதியில் பாதுகாப்புப் படையினரும் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

சாதாரண மக்களின் நியாயமான போராட்டங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும் பொலிஸார், பிரதான அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு மட்டும் தளர்த்தப்பட்ட போக்கைக் கடைப்பிடிப்பதாகத் தெரிவித்து அவர் தனது தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

161 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

150 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

141 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

138 0 0