உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

கனமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் வழியாக நீர் வெளியேற்றம்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
85 பார்வைகள்

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது.

இன்று காலை 10.30 மணிக்கு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மூன்று வழிகளில் நீர் வெளியேற்றம் செய்யப்படுவதால் தாழ் நிலக் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக டயகம பகுதியில் ஆரம்பிக்கும் மகாவலி கங்கையின் வெள்ள நீர் அதிகரித்து வருவதாலும் அப் பகுதியில் இருந்து ஆரம்பமாகும் ஏனைய அனைத்து ஓடைகளில் அதிக மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அதிக அளவில் நீர் வருவதால் தற்போது வான் கதவுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது.

இதன் காரணமாக மகாவலி கங்கையை அண்மித்த பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரெலியா மாவட்ட காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தல் விற்பனை செய்தவருக்கு மில்லியன் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலான விலைக்குப் குடிநீர் போத்தலை விற்பனை செய்தமை தொடர்பில், எல்ல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் ரூபாய்…

71 0 0
இலங்கை செய்திகள்

அருவித்தோட்டத்தில் மக்களின் காணிகளில் எல்லையிடும் வனவள திணைக்களத்தின் செயற்பாடு சத்தியலிங்கம் எம்.பியின் தலையீட்டினால் இடைநிறுத்தம்!

வவுனியாவின் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அருவித்தோட்டம் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் வனவள திணைக்களத்தினர் அடாத்தாக எல்லைக்கற்கள் இடுவதாக அருவித்தோட்டம் கமக்காரர் அமைப்பினால் இலங்கைத் தமிழ் அரசுக்…

48 0 0
இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சியின் பலவீனத்தையே ஆர்ப்பாட்டங்கள் காட்டுகின்றன.!

எதிர்க்கட்சியின் பலவீனமும் ஆதரவற்ற நிலையும் அவர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவே வெளிப்படுவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன…

66 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.!

சவூதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சவூதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கின்றோம் என மன்னாரில்…

91 0 0