கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவுக்கு விளக்கமறியல்.!
கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போடரகம இன்று (24) உத்தரவிட்டார்.
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் அவர் இன்று (24) பிற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.
கிரிஷ் நிறுவனத்திற்காக, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை ‘டிரான்ஸ்வொர்க் சதுக்கம்’ (Transworks Square) நிலத்தை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகக் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இந்த 70 மில்லியன் ரூபாய் பணத்தை மூன்று சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.