உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

மொழிபெயர்க்க முயன்ற இளைஞன் மீது பொலிஸார் கொடூரத் தாக்குதல்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
97 பார்வைகள்

களவு நகை தொடர்பிலான விசாரணை ஒன்றின் போது, பொலிஸாருக்கு மொழிபெயர்த்து உதவ முயன்ற இளைஞன் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (24) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கொழும்பு 11, செட்டியார் தெரு பகுதியில் களவு நகை தொடர்பான விசாரணைக்காக பொலிஸார் வருகை தந்திருந்த வேளையில், மொழிப் பிரச்சினை காரணமாக விசாரணை நடவடிக்கைகளை இரு தரப்பினருக்கும் புரிய வைப்பதற்காக ‘இலக்கம் 152ஐச் சேர்ந்த ஜீவா’ என்பவர் பொலிஸாருக்கு விளக்கிப் பேச முயன்றுள்ளார்.

இதன்போது, எந்தவித நியாயமான காரணமுமின்றி ஆத்திரமடைந்த மூன்று பொலிஸார் இணைந்து, ஜீவாவை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

பொலிஸாரின் இத் தாக்குதலில் காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை அவசர சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

பொதுமக்களுக்குச் சட்டத்தின் வழியில் உதவ முன்வந்த இளைஞன் மீது பொலிஸார் மேற்கொண்ட இத்தாக்குதலைக் கண்டித்து அங்கு பொதுமக்கள் மற்றும் செட்டியார் தெரு நகை வியாபாரிகள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால், செட்டியார் தெரு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிலைமையைச் சீராக்கியதோடு, தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸார் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அவரது உறுதிமொழியைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்றதோடு, செட்டியார் தெரு போக்குவரத்தும் சீர் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் துரிதமாக நடைபெறுமென பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தல் விற்பனை செய்தவருக்கு மில்லியன் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலான விலைக்குப் குடிநீர் போத்தலை விற்பனை செய்தமை தொடர்பில், எல்ல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு ஒரு மில்லியன் ரூபாய்…

71 0 0
இலங்கை செய்திகள்

அருவித்தோட்டத்தில் மக்களின் காணிகளில் எல்லையிடும் வனவள திணைக்களத்தின் செயற்பாடு சத்தியலிங்கம் எம்.பியின் தலையீட்டினால் இடைநிறுத்தம்!

வவுனியாவின் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அருவித்தோட்டம் பகுதியில் பொதுமக்களின் காணிகளில் வனவள திணைக்களத்தினர் அடாத்தாக எல்லைக்கற்கள் இடுவதாக அருவித்தோட்டம் கமக்காரர் அமைப்பினால் இலங்கைத் தமிழ் அரசுக்…

48 0 0
இலங்கை செய்திகள்

எதிர்க்கட்சியின் பலவீனத்தையே ஆர்ப்பாட்டங்கள் காட்டுகின்றன.!

எதிர்க்கட்சியின் பலவீனமும் ஆதரவற்ற நிலையும் அவர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவே வெளிப்படுவதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன…

66 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.!

சவூதியில் உள்ள அனோஜன் பதிவிட்ட கருத்திற்காக அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்ற கோரிக்கையை சவூதி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கின்றோம் என மன்னாரில்…

91 0 0