உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

22ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு; பொல்துவை சந்தியில் மக்கள் வெள்ளம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
118 பார்வைகள்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தற்போதைய அரசாங்கத்தை உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் பத்தரமுல்லை, பொல்துவை சந்தியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாடாளுமன்றத்திற்கு செல்லும் நுழைவாயில் பகுதியில் இடம்பெறும் இப்போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றுள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், நிலைமையைக் கட்டுப்படுத்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இப்போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டைச் சீரழிக்கும் மற்றும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக வீட்டிற்குச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மட்டுமன்றி, பொய் வாக்குறுதிகளைக் கூறி ஆட்சியைப் பிடித்த இந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து துரத்துவதற்கு நாட்டின் 220 இலட்சம் (2.2 கோடி) மக்களும் ஒன்றிணைந்து அணிதிரள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராகவும், “வேண்டாம் வேண்டாம்”, “ஜனாதிபதியே வெளியேறு” போன்ற கடுமையான கோஷங்களை எழுப்பியும் தங்களது பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

162 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

151 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

142 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

139 0 0