இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து.!
புத்தல – மொனராகலை பிரதான வீதியின் மஹகொடையாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி இன்று வியாழக்கிழமை (24) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெல்லவாயவிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, பயணிகளை இறக்குவதற்காக மஹகொடையாய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வேளையில், மாறையிலிருந்து அம்பாறை நோக்கி பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்று அதன் பின்புறத்தில் மோதியதிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

