IPL 2027 ஏலம்: BCCI உத்தியோகபூர்வ அறிவிப்பு!
2027 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் ஏலம் கோவாவில் நடைபெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) அறிவித்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக துபாய் (Dubai), ஜித்தா (Jeddah) மற்றும் அபுதாபி (Abu Dhabi) ஆகிய நாடுகளில் IPL ஏலம் நடத்தப்பட்ட நிலையில், இம்முறை மீண்டும் இந்தியாவில் நடத்தப்படவுள்ளது.
IPL தலைவா் அருண் துமால் மற்றும் BCCI செயலாளர் தேவஜித் சைக்கியா வழங்கிய தகவல்களின்படி, இந்த மினி ஏலம் (Mini Auction) எதிர்வரும் டிசம்பர் 15 , 16 ஆம் திகதிகளில் கோவாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.