இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணிக்கு 15% அபராதம்!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக (Slow Over-rate) இலங்கை கிரிக்கெட் அணிக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அறிவித்துள்ளது.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 3 ஓவர்கள் குறைவாக வீசியமை கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக, பந்துவீசத் தவறிய ஒவ்வொரு ஓவருக்கும் தலா 5 சதவீதம் என்ற அடிப்படையில் மொத்தம் 15 சதவீதம் அபராதத்தை போட்டி நடுவர் ஜெஃப் குரோ (Jeff Crowe) விதித்துள்ளார்.
இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை.
கள நடுவர்களான வெய்ன் நைட்ஸ் (wayne knights), கிரஹாம் லாயிட் (Graham Lloyd) மற்றும் ஏனைய நடுவர்களால் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.