உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

அனோஜனின் விடுதலைக்காக அமெரிக்க, இந்தியத் தரப்புகளுடன் தமிழரசின் எம்.பிக்கள் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
79 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்கான இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் கொழும்பிலுள்ள இந்திய மற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு இணங்க, கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையில் சண்முகம் குகதாசன், மருத்துவர் சத்தியலிங்கம், கோடீஸ்வரன், சிறிநேசன், சிறிநாத் மற்றும் ரவிகரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் சந்திப்புகளில் கலந்துகொண்டனர்.

இதற்கமைய, நேற்று புதன்கிழமை இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் அன்ரனி வி. பிரினோட் ஆகியோரைத் தனித்தனியாகச் அவர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசர தேவைகள் குறித்தும், அவரை மீட்கும் விவகாரத்தில் தூதரக ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

சம்பந்தப்பட்ட அனைத்துலகத் தரப்புகளுடனும் ஒருங்கிணைந்து உரிய இராஜதந்திர அழுத்தங்களையும் முயற்சிகளையும் முன்னெடுப்பதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாக செயற்பட வேண்டும்.!

சவூதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜன் விடயத்தில், இலங்கையின் அரசியல்வாதிகள் எதைப் பேசுவது, எதைப் பேசக்கூடாது என்பதில் தவறி வருவதாக உலமா கட்சியின்…

62 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய கனமழை.!

நேற்று நள்ளிரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதேவேளை பல பகுதிகளில் அதிக அளவில் பனி மூட்டம்…

87 0 0
இலங்கை செய்திகள்

அதிகாலையில் பயங்கரம்; வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் கொ**லை;

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில், இன்று (24) அதிகாலை 2 மணியளவில் வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீடொன்றில் தந்தை,…

74 0 0
இலங்கை செய்திகள்

தியாக தீபத்தை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்.!

தியாக தீபம் திலீபனின் தியாகத்தை எடுத்துக் காட்டும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒருநாள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்து அவர்கள்…

84 0 0