உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

அனோஜனை உடனடியாக மன்னித்து விடுவியுங்கள்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
70 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு ஒரு நாடாக நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“சிவராசா அனோஜன் விவகாரமானது வெளிவிவகார அமைச்சுடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஒரு விடயமாகும் என்பதால், இதற்கு அரசே முன்னுரிமை வழங்கி மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டும்.

இந்தப் பிரச்சினையை அரசியல் மயமாக்குவதாலோ அல்லது வெளிவிவகார அமைச்சுக்கு அழுத்தங்களை ஏற்படுத்துவதாலோ எத்தகைய பலனும் கிடைக்கப் போவதில்லை.

அனோஜனைச் சட்ட ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் மீட்டுக்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் எமது முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அதிகாலையில் பயங்கரம்; வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் கொ**லை;

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில், இன்று (24) அதிகாலை 2 மணியளவில் வீடொன்றில் உறங்கிக்கொண்டிருந்த தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீடொன்றில் தந்தை,…

71 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக அமெரிக்க, இந்தியத் தரப்புகளுடன் தமிழரசின் எம்.பிக்கள் சந்திப்பு.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்கான இராஜதந்திர முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் கொழும்பிலுள்ள இந்திய…

78 0 0
இலங்கை செய்திகள்

தியாக தீபத்தை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்.!

தியாக தீபம் திலீபனின் தியாகத்தை எடுத்துக் காட்டும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஒருநாள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்து அவர்கள்…

84 0 0
இலங்கை செய்திகள்

எருமை மாட்டுடன் மோதிய வாகனம்.!

திருகோணமலை, தம்பலகாமம் – கிண்ணியா பிரதான வீதியில் எருமை மாட்டுடன் வேன் மோதிய விபத்தில் சாரதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிண்ணியாவில் இருந்து கொழும்பு நோக்கிச்…

86 0 0