உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலே மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வு

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
71 பார்வைகள்

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களுக்கு மேய்ச்சல் தரைகளை மீட்டுக்கொடுப்பதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்போம். இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலே நாங்கள் அந்த மேய்ச்சல் தரைக்கான நிலத்தை விடுவித்து வழங்குவதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் முன்னெடுக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மேய்ச்சல் தரை விவகாரம் நாங்கள் பேசத் தொடங்கியதில் இருந்து, பல இனவாத ரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்ற விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

முன்னாள் ஆளுநர் மற்றும் அவரோடு சேர்ந்ததான மொட்டுக்கட்சியினைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைப்பாளர்களும் என ஒருசிலர் ஒன்றிணைந்து, நாங்கள் விடுவிக்கப்படவிருக்கின்ற அந்தப் பிரதேசத்துக்குள்ளே சில குழப்பமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்கான போராட்டம் இப்போது தீவிரமடைந்திருப்பதை நாங்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது.

2023-ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து அவர்கள் தங்கள் மேய்ச்சல் தரைக்காக போராடிக்கொண்டு வருகின்றார்கள்.

கிட்டத்தட்ட 1000 நாட்களைத் தாண்டி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த வேளையிலே, 2026-ஆம் ஆண்டு 5-ஆம் மாதம் 20-ஆம் திகதி ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட வேளையில், இந்த மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை தொடர்பான பண்ணையாளர்கள் எதிர்நோக்குகின்ற தங்களது நிலத்திற்கான போராட்டத்திற்கான முற்றுப்புள்ளி வைக்கின்ற விதமாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஒரு தீர்மானம் எட்டப்பட்டிருந்தது.

அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தலைமையில் 1570 ஏக்கர் மகாவலிக்குச் சொந்தமாக இருக்கின்ற அந்த நிலத்தினை விடுவிப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் பணிப்புரை வழங்கியிருந்தார். அந்த அடிப்படையிலே, தொடர்ச்சியாக அந்த நிலத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துக் கொண்டு வருகின்றோம்.

அதன் பின்னர் இப்போது புதிதாக ஒரு பிரச்சனை ஒன்று எழுந்திருக்கின்றது. இந்த மேய்ச்சல் தரைக்குள்ளே, அந்த பண்ணையாளர்கள் கோருகின்ற அந்த நிலத்துக்குள்ளே வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்து, தாங்கள் தோட்டத் தொழிலை மேற்கொள்வதற்காக அல்லது தோட்டத்தை நடத்துவதற்காக அவர்கள் முன்னெடுத்துக் கொண்டு வருகின்ற நடவடிக்கை தொடர்பாகவும், அந்த மேய்ச்சல் தரை காணிக்குள்ளே அவர்கள் தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சில முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் சில விடயங்கள் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

உங்களுக்குத் தெரியும், இந்த மேய்ச்சல் தரை விவகாரம் நாங்கள் பேசத் தொடங்கியதில் இருந்து, பல இனவாத ரீதியான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்ற விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

உங்களுக்குத் தெரியும், முன்னாள் ஆளுநர் மற்றும் அவரோடு சேர்ந்ததான மொட்டுக்கட்சியினைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைப்பாளர்களும் என ஒருசிலர் ஒன்றிணைந்து, நாங்கள் விடுவிக்கப்படவிருக்கின்ற அந்தப் பிரதேசத்துக்குள்ளே சில குழப்பமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

ஆகவே, தெளிவான ஒரு சிந்தனையிலே நாங்கள் இருக்கின்றோம். அந்த மேய்ச்சல் தரையை, மாடு வளர்க்கின்ற அந்தப் பண்ணையாளர்களுக்கு, பால் பண்ணையாளர்களுக்கு அந்த நிலத்தை மீட்டுக்கொடுப்பதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ச்சியாக முன்னெடுப்போம்.

அதை எந்தவொரு வகையிலும் நாங்கள் கைவிடப் போவது கிடையாது. இந்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலே நாங்கள் அந்த மேய்ச்சல் தரைக்கான நிலத்தை விடுவித்து வழங்குவதற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் முன்னெடுக்கின்றோம்.

வருகின்ற வாரம் அதன் முன்னேற்றம் தொடர்பான விடயத்தினை மேல்மட்டத்தில் இருக்கின்ற நடவடிக்கை தொடர்பான விடயங்களை நாடாளுமன்றத்திலே, எங்களது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கௌரவ அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் தலைமையிலே முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் இடம்பெற இருக்கின்றது.

ஆகவே, இதை வெகுவிரைவாக விடுவிப்பு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். எங்களது மேன்மை தங்கிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் விடுவித்த அந்தப் பணிப்புரையின் அடிப்படையிலே அதை நாங்கள் மீட்டுத்தர தயாராக இருக்கின்றோம்.

அதனைப் போன்று, இந்த காணிகளுக்குள்ளே அத்துமீறி செயல்படுபவர்கள் தொடர்பாகவும் பொலிஸாருக்கு நாங்கள் பணிப்புரை வழங்கி இருக்கின்றோம். அதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், மேலதிகமாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகரின் ஊடாகவும் அந்த பொலிஸ் நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெறுகின்றது என்பது தொடர்பாகவும் விசாரணைகள் இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

மகாவலி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் அந்த விசாரணைகளை பொலிஸாருடன் இணைந்து தற்போது முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

அவர்களை இந்த இடத்தில் வந்து, பண்ணையினைக் குழப்புகின்ற, மக்களைக் குழப்புகின்ற செயல்பாடுகள் முன்னெடுக்கின்றார்கள். அவர்களுக்கும் இங்கே காணிகள் இருக்கின்றதா என்பது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கின்றோம்.
யாராக இருந்தாலும் அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையிலே, தங்களது தொழில்களை, தங்களது வருமானம் ஈட்டுகின்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடத்தான் வேண்டும். அதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் நாங்கள் வழங்குவோம். அதனைப் போன்று, இதனை பின்னணியில் இருந்து குழப்புகின்றவர்களுக்கு எதிராகவும் நாங்கள் எங்களது அவதானிப்புகளைச் செலுத்திக் கொண்டிருக்கின்றோம்.
உங்களுக்குத் தெரியும், அது கிட்டத்தட்ட 3000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரதேசம். அதிலே 1500 ஏக்கர் மகாவலிக்குச் சொந்தமான இடம் இருக்கின்றது. மேலதிக பகுதிகள் வனத் திணைக்களத்துக்குச் சொந்தமாக இருக்கின்றது. அனைத்துப் பகுதிகளின் ஊடாகவும் வழிகள் இருக்கின்றன அந்த இடத்தைச் சென்றடைவதற்கு. எவ்வழியின் ஊடாக அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் என்பது தொடர்பான தகவலை நாங்கள் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

அதனைப் போன்று பொலிஸாருக்கும், பொலிஸ் மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் நாங்கள் அறிவுறுத்தல் வழங்கி இருக்கின்றோம். அதனைப் போன்று மகாவலி திணைக்களத்துக்கும் இவர்கள் தொடர்பாகத் தகவல்களைத் திரட்டி, அவர்களுக்கு சம்பந்தமான காணிகள் தொடர்பான விடயங்கள் இருக்கின்றதா என்பதையும் தேடிப் பார்க்கச் சொல்லி இருக்கின்றோம்.

நீங்கள் குறிப்பிட்டது போன்று நீதிமன்ற வழக்கு முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கிலே சில விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, அந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளுமாறு நாங்கள் பணித்திருக்கின்றோம்.

மகாவலி திணைக்களத்தின் ஊடாகவும், பொலிஸார் ஊடாகவும் அந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.
பண்ணையாளர்கள் அன்றைய தினமும் குறிப்பிட்டிருந்தார்கள், தங்களது முறைப்பாடுகளை பொலிஸார் கருத்தில் கொள்வதில்லை என்று கரடியானாறு பொலிஸ{க்குத் தான் இது சம்பந்தப்பட்டிருக்கின்றது.

ஆகவே, அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் பணிப்புரை வழங்கி இருக்கின்றோம், அவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் வரும்போது அதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அத்துமீறி செயல்படுபவர்களுக்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர்களுக்குப் பணித்திருக்கின்றோம்.

ஆகவே, இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்ற நடவடிக்கை தொடர்பான விடயங்களும் இதில் இருப்பதனால், அதனையும் கருத்தில் கொண்டு நாங்கள் செயல்பட வேண்டி இருக்கின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை அரசு சவூதியை நாடிய பின்னரே இந்தியா தலையிட முடியும்!

சிவராசா அனோஜன் விவகாரத்தில் இலங்கை அரசு அதிகாரபூர்வமாகச் சவூதி அரசை நாடி கோரிக்கை விடுத்த பின்னரே, இது தொடர்பில் இந்தியா தனது முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

வாகரையில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் திலீபனின் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

தமிழர் தாயக பிரதேசங்களி தியாகி திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு வாகரை மாங்கேணி பிரதேசத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்…

85 0 0
இலங்கை செய்திகள்

வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியை மின்னேரியாவில் சட@லமாக மீட்பு!

வவுனியா – கோவில்குளம் இந்துக் கல்லூரி ஆசிரியரும், கலை இலக்கிய ஆர்வலருமான செல்வி வனிதா சேனாதிராஜா (வயது 41) பொலனறுவை, மின்னேரியா பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

92 0 0
இலங்கை செய்திகள்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கான பேச்சு திடீரென இடைநிறுத்தம்!

இலங்கை மற்றும் இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியாவில் நடைபெறவிருந்த இரு தரப்புப் பேச்சு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்பரப்புக்குள்…

80 0 0