உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக “கப்ருக வருணயி, ரட்டம சவியயி” எனும் பயிர்ச்செய்கைப் புரட்சி ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
152 பார்வைகள்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் தென்னை, பலா, ஈரப்பலா மற்றும் பல்வேறு பழக்கன்றுகளை நடும் தேசியத் திட்டத்தின் தொடக்கமாக “கப்ருக வருணயி, ரட்டம சவியயி” (Kapruka Varunai, Ratatama Saviyai) எனும் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பயிர்ச்செய்கைப் புரட்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆனமடுவ, லபுகல ராஜமகா விகாரை வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வு, இளம் தொழிலதிபர் சேனக அபேசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய சேனக அபேசிங்க,
அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டிற்கு ஆற்றக்கூடிய சேவைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,
“அரசியல் பேதங்களின்றி நாடு முழுவதும் பலா, தென்னை மற்றும் ஈரப்பலா கன்றுகளை நடும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். அத்துடன், அழியும் அபாயத்திலுள்ள பல்வேறு வகையான பழ மரக்கன்றுகளையும் மண்ணுக்குக் கொடையாக வழங்க இத்திட்டம் ஆயத்தமாகியுள்ளது.

யார் அரசியல் செய்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் உணவுச் இறையாண்மையையும் (Food Sovereignty) பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்,” எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் ஆசீர்வதித்து உரையாற்றிய லபுகல ராஜமகா விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய சாரானந்த நாயக்க தேரர்,
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பயிர்ச்செய்கைப் புரட்சியை வெற்றிபெறச் செய்வதற்குத் தமது முழுமையான பங்களிப்பையும் ஆதரவையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

163 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

151 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

142 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

139 0 0