உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடன் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
94 பார்வைகள்

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை, நீடிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டுடன் செயற்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அதற்கு அப்பாலான நாட்டின் பொருளாதார தொலைநோக்குப் பார்வை குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டின் வெளிப்புற சூழல், அந்நிய செலாவணி கையிருப்பு, கடனின் நிலைத்தன்மை, நிதி நிலைமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் 2027 மார்ச் மாதத்திற்குப் பின்னான இலங்கையின் பொருளாதார மீளெழும் திறன் குறித்து இரு தரப்பினரும் விரிவாக ஆராய்ந்தனர்.

நிலையான கடன் கொள்கைகள், அரச நிதி நிலைமை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்பார்ப்புகள் உட்பட, தற்போதைய திட்டத்தின் இறுதியில் இலங்கை அடைய வேண்டிய அளவிடக்கூடிய பொருளாதார நிலைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அரச நிதியை ஒருங்கிணைத்தல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்புகள் காரணமாக உழைக்கும் மக்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மீது விகிதாசாரமற்ற சுமை சுமத்தப்படக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.

பேரினப் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிதி ஒழுக்கத்தைப் பேணுகின்ற அதேவேளையில், குடும்பங்கள் மற்றும் நுண், சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாண்மைகள் எதிர்கொள்ளும் உண்மையான பொருளாதார நிலைமைகள் மீது அதிக கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தை ஒட்டுமொத்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள் மூலம் மாத்திரம் மதிப்பீடு செய்யாமல், குடும்பங்கள், தனிநபர்கள் மற்றும் வணிக மட்டத்தில் அதன் தாக்கம் மூலமாகவும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ஹர்ஷன ராஜகருணா, கபீர் ஹாஷிம், ஹெக்டர் அப்புஹாமி, அஜித் பி. பெரேரா, முஜிபுர் ரஹ்மான், பேராசிரியர் பிரசன்ன பெரேரா, தலல் ரபி, குசும் விஜேத்திலக்க, திலும் அழகியவண்ண மற்றும் சுரங்க ரணசிங்க உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விடுதி ஒன்றில் சுற்றிவளைப்பு; நால்வர் கைது.!

திருகோணமலை உவர்மலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் தொழில் நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

66 0 0
இலங்கை செய்திகள்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக “கப்ருக வருணயி, ரட்டம சவியயி” எனும் பயிர்ச்செய்கைப் புரட்சி ஆரம்பம்.!

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் தென்னை, பலா, ஈரப்பலா மற்றும் பல்வேறு பழக்கன்றுகளை நடும் தேசியத் திட்டத்தின் தொடக்கமாக “கப்ருக…

83 0 0
இலங்கை செய்திகள்

22 ஆவது திருத்தச் சட்டமூலம்; வெள்ளி மாலை வாக்கெடுப்பு.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு நடத்தப்படவுள்ளது. 22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல்…

95 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாண முஸ்லிம்களும் குரல் கொடுக்கின்றோம்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை விடுவிக்க வேண்டும் என்ற தேசிய மற்றும் சர்வதேச…

46 0 0