உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

22 ஆவது திருத்தச் சட்டமூலம்; வெள்ளி மாலை வாக்கெடுப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
95 பார்வைகள்

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்தச் சட்டமூலம் இலங்கையின் அரசமைப்புடன் முரண்படவில்லை என்பதால் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என்றும், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மையுடன் இதனை நிறைவேற்றலாம் என்றும் தீர்ப்பளித்திருந்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நேற்று நாடாளுமன்றத்தில் சபாநாயகரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தச் சட்டமூலம் குறித்த விவாதத்தை நடத்துவதற்காக எதிர்வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தன.

அதற்கமைய, இரண்டு நாள் விவாதத்தின் நிறைவில் வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விடுதி ஒன்றில் சுற்றிவளைப்பு; நால்வர் கைது.!

திருகோணமலை உவர்மலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் தொழில் நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சுற்றிவளைப்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

66 0 0
இலங்கை செய்திகள்

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக “கப்ருக வருணயி, ரட்டம சவியயி” எனும் பயிர்ச்செய்கைப் புரட்சி ஆரம்பம்.!

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் தென்னை, பலா, ஈரப்பலா மற்றும் பல்வேறு பழக்கன்றுகளை நடும் தேசியத் திட்டத்தின் தொடக்கமாக “கப்ருக…

83 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடன் சந்திப்பு.!

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்கள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சர்வதேச நாணய நிதியத்தின்…

93 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக யாழ்ப்பாண முஸ்லிம்களும் குரல் கொடுக்கின்றோம்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை விடுவிக்க வேண்டும் என்ற தேசிய மற்றும் சர்வதேச…

45 0 0