உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வங்காள விரிகுடாவில் சக்தி வாய்ந்த தாழமுக்கம்; வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
83 பார்வைகள்

வங்காள விரிகுடா ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகளுக்கு, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு – மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று (23) இலங்கை நேரப்படி காலை 05:30 மணியளவில் வட அட்சரேகை 18.0°N மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 84.7°E க்கு அருகில் நிலைகொண்டிருந்தது.

இந்த அமைப்பானது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு வேளையில் இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளைக் கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் அப்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55-65 கி.மீ வரை அதிகரிக்கும் என்பதுடன், கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

வட அட்சரேகை 07°N முதல் 22°N வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 83°E முதல் 95°E வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரும் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது அப்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக அந்த கடல் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று (23) காலை 10:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல் அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றில் நள்ளிரவில் திடீர் தீப்பரவல்.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பளவெளிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நள்ளிரவு வேளையில் திடீர் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இத் தீப்பரவலின் காரணமாக குறித்த…

2 0 0
இலங்கை செய்திகள்

யாழில் புகையிரதத்துடன் மோதிய உந்துருளி; சம்பவ இடத்திலேயே ஒருவர் உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாணம், அரியாலை புங்கன்குளம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கு…

78 0 0
இலங்கை செய்திகள்

நான்கு பிள்ளைகளின் தந்தையைக் காணவில்லை.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான அமீர் அலி பாரிஸ் என்பவர் கடந்த சில மாதங்களாகக் காணாமல் போயுள்ளதாக அவரது…

70 0 0
இலங்கை செய்திகள்

மணல் தட்டுப்பாடு; குளங்களில் இருந்து கழுவி எடுக்கப்பட்ட மணலை விநியோகிக்க நடவடிக்கை.!

வடக்கு மாகாணத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, குளங்களில் இருந்து கழுவி எடுக்கப்பட்ட மணலை பொதுமக்களின் கட்டுமானத் தேவைகளுக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (23.09.2026)…

74 0 0