உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரமாணக் குறிப்புக்கு முரணான வடமாகாண அதிபர் நியமனம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
160 பார்வைகள்

2023 டிசம்பர் முதல் வழங்கப்பட்ட அதிபர் நியமணத்தில் அரசியல் அழுத்தம் காரணமாகவும் பாராபட்சத்தினாலும் அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு முரணாக அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதால் இன்று வரை கடமையேற்க முடியாமல் பல அதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநரிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்கள்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தினரின் அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தரம் 3 அதிபர் சேவைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு, வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு 2023.12.15 ஆந் திகதி தொடக்கம் பல்வேறு திகதிகளில் இடநிலைப்படுத்தல் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன.

அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரிவு 11 (பதவிகளுக்கு நியமித்தல்) இன் உப பிரிவு 3 இல் குறிப்பிட்டுள்ள சேவை மூப்பு மற்றும் திறமை அடிப்படையில், அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை முற்றாகப் புறந்தள்ளி – சேவை மூப்பு மற்றும் திறமையை கருத்தில் கொள்ளாமல் மேற்படி கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறித்தும், அதிபராக, பிரதி அதிபராக, உதவி அதிபராக எழுந்தமானமாகவும், பாரபட்சமாகவும் குறித்த இடநிலைப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்டமை குறித்தும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், சேவை மூப்பு மற்றும் திறமை கூடியவர்களை அதிபராக நியமிக்காமல் பாரபட்சங்கள் காட்டப்பட்டுள்ளதன் மூலம், அதிபர் சேவைப் பிரமாணக்குறிப்பை மீறுவது மட்டுமல்லாமல், பாரபட்சங்கள், தலையீடுகள் மூலம் வடக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சியை தோல்வி அடையச் செய்யும் செயற்பாடாகவும் சந்தேகிக்கின்றோம்.

அத்துடன் – வெளிமாவட்டத்தில் இடநிலைப்படுத்தப்பட்ட அதிபர் சேவையைச் சேர்ந்த சிலரை அரசியல் தலையீடு மற்றும் பல்வேறு வகையான செல்வாக்கின் அடிப்படையில், மருத்துவ சபையின் தீர்மானமின்றி அவர்கள் கடமையேற்று சில வாரங்கள் மற்றும் மாதங்களில் மருத்துவக் காரணம் என்ற சோடிக்கப்பட்ட காரணங்களை உருவாக்கி, அவர்களுக்கு சொந்த வலயம் மற்றும் சொந்த மாவட்டத்திற்கு தன்னிச்சையாக இடமாற்றமும் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு முரணாகவும், பாரபட்சங்களாகவும் இடநிலைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டமையால் பாதிக்கப்பட்ட குறித்த தொகை அதிபர்கள் இன்று வரை கடமையேற்க முடியாமல் உள்ளமை தொடர்பிலும் தங்களின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம்.

பாதிக்கப்பட்ட அக்குறித்த தொகை அதிபர்களின் விடயத்தை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் அடிப்படையிலும், நியாயமான முறையிலும் பரிசீலித்து – அக்குறித்த தொகை அதிபர்களும் கடமையேற்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” என குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அதிபர் ஒருவர் ஐனாதிபதி செயலகத்திற்க்கும் முறைப்பாடொன்றை முன்வைத்து ஆளுநரின் கவனத்திற்கு ஐனாதிபதி செயலகத்தாலும் குறித்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் வடமாகாணம் கல்வியில் கடந்த க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கையாலாகாத ஆளுநர் ஆசிரியர் சங்கங்கள், அதிபர் சங்கங்கள் போன்ற பல அமைப்புக்களின் முறைப்பாடுகளை தாண்டியும் கல்வியமைச்சின் செயலாளருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தினறி வருகின்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

163 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

152 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

142 0 0
இலங்கை செய்திகள்

மழையை நம்பி மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்ச்செய்கை மழையின்மையால் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 /.2027 ஆம் ஆண்டுக்கான பெரும் போகநெற்செய்கை கொள்ளப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் மழையை நம்பி நெற்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய…

139 0 0