உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சுகீஷ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
74 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று புதன்கிழமை (23) சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றிய போதும், ஜனாதிபதிக்கான செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக சுகீஷ்வர பண்டார மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்.!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் இன்று (23) முற்பகல் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் நீதிச்சேவையின் விசேட தர அதிகாரியான…

79 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் முதலிட ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம்.!

வடக்கு மாகாணத்திலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சில ஜப்பானிய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் இலங்கையின் தற்போதைய நிலைமைகளையும் வடக்கு மாகாணத்தின் சூழலையும் அவதானித்து வருவதாகவும் இலங்கைக்கான ஜப்பானியத்…

84 0 0
இலங்கை செய்திகள்

சுமார் 24.8 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு பணப் பரிமாற்றம் தொடர்பில் சந்தேகநபர் கைது.!

தந்தி பரிமாற்றங்கள் (TT) மூலம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு சுமார் 24.8 பில்லியன் ரூபாய்க்கு இணையான வெளிநாட்டு நாணயங்களை மாற்றிய குற்றச்சாட்டின் பேரில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…

98 0 0
இலங்கை செய்திகள்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேலும் இருவர் பணிநீக்கம்.!

நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பாக, நுவரெலியா மாவட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிய இளைஞர் மன்றத்தில் பணியாற்றிய…

92 0 0