உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பில் மேலும் இருவர் பணிநீக்கம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
88 பார்வைகள்

நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி தொடர்பாக, நுவரெலியா மாவட்ட நோர்வூட் பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிய இளைஞர் மன்றத்தில் பணியாற்றிய ஒருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த இவர், அஸ்வெசும நிதி வழங்கல் தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இவரது மனைவி ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், குறித்த நிதி முறைகேட்டில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டதையடுத்து, அவரும் ஆசிரியர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஸ்வெசும நிதி வழங்கல் தொடர்பில் இடம் பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து அதிகாரிகளால் தொடர்ந்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

67 0 0
இலங்கை செய்திகள்

சுமார் 24.8 பில்லியன் ரூபாய் வெளிநாட்டு பணப் பரிமாற்றம் தொடர்பில் சந்தேகநபர் கைது.!

தந்தி பரிமாற்றங்கள் (TT) மூலம் வெளிநாட்டுக் கணக்குகளுக்கு சுமார் 24.8 பில்லியன் ரூபாய்க்கு இணையான வெளிநாட்டு நாணயங்களை மாற்றிய குற்றச்சாட்டின் பேரில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…

93 0 0
இலங்கை செய்திகள்

கச்சாய்க் குளத்தை புனரமைப்பது தொடர்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி.!

அதிகரித்த வெப்பம் காரணமாக கச்சாய்க் குளத்தின் நீர்மட்டம் வற்றியுள்ளதால், அப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குளத்தை…

93 0 0
இலங்கை செய்திகள்

இரவு நேர வழிப்பறியாக மாறிவரும் ஹட்டன் நகரின் முச்சக்கரவண்டி வாடகை.!

ஹட்டன் நகருக்கு இரவு நேரங்களில் தலைநகர் கொழும்பு, கண்டி மற்றும் நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பயணிகளிடம் இரவு 9 மணிக்குப் பின்னர் முச்சக்கரவண்டிகளில்…

75 0 0