உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் குறித்து நீதி அமைச்சருடன் சுவிஸ் பதில் தூதுவர் பேச்சு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
164 பார்வைகள்

நீண்டகாலமாகப் பதில்களுக்காகக் காத்திருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கான நகர்வுகள் தொடர்பிலும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும், இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து பதில் தூதுவர் ஒலிவியர் பிராஸும் விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.

நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கும் இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து பதில் தூதுவர் ஒலிவியர் பிராஸுக்கும் இடையிலான இந்த முக்கிய சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள நீதி அமைச்சில் நடைபெற்றது.

நீண்டகாலமாக நீதிக்காகக் காத்திருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் அரசின் தரப்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்படல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை முழுமையாக உறுதிப்படுத்துவதற்கான எதிர்கால நகர்வுகள் குறித்து இரு தரப்பினரும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

இலங்கையின் சமகால அரசியல் மற்றும் சமூக நிலைவரங்கள் குறித்துச் சுவிட்ஸர்லாந்து பதில் தூதுவருக்கு விளக்கமளித்த நீதி அமைச்சர், இவ்விரு துறைகள் சார்ந்த அரசின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் தீர்மானங்கள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.

கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் திருமதி ஜஸ்டின் போய்லாட்டும் இந்தச் சந்திப்பில் உடனிருந்து பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டியும் 4 உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி கோர விபத்து.!

பருத்தித்துறை – தும்பளை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் நான்கு உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளமையுடன், அவரது தாய் மற்றும் தந்தையரும் காயங்களுக்குள்ளாகிப்…

114 0 0
இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

163 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

152 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

142 0 0