உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தனது இறுதி சர்வதேச போட்டிக்கான சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தினார் மெஸ்ஸி

109 பார்வைகள்

அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ள கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அர்ஜென்டினா மற்றும் பெனின் அணிகளுக்கு இடையிலான சர்வதேச நட்புறவுப் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி புவனஸ் அயர்ஸில் உள்ள எஸ்டாடியோ மொனுமென்டல் (Estadio Monumental) மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியே அர்ஜென்டினா தேசிய அணிக்காக மெஸ்ஸி விளையாடும் கடைசி போட்டியாக அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெஸ்ஸி தனது சமூக வலைத்தளப் பதிவின் மூலம் சிறப்பு ஜெர்சியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

அர்ஜென்டினாவின் பாரம்பரிய நிறங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த ஜெர்சியில், மெஸ்ஸியின் பெயரும் 10ஆம் இலக்கமும் தங்க நிறத்தில் இடம்பெற்றுள்ளதுடன், பின்புறத்தில் அர்ஜென்டினாவின் அடையாளமான ‘மே மாத சூரியன்’ இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடைசிப் போட்டி… வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் ஜெர்சி” என்ற கருத்துடன் மெஸ்ஸி இந்த ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

127 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

92 0 0