உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
25 வெள்ளி

இன்றைய ராசி பலன்கள் – 23.09.2026

ராசி பலன்கள் 2 நாட்கள் முன்
35 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். அமைதியான இந்த நாள் உங்களுடைய வேலையையும் வியாபாரத்தையும் சுமூகமாக எடுத்து செல்லும். உங்கள் மீது விழுந்த தேவையில்லாத பழி விலகும். நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். முன்கோபம் குறையும். பக்குவமாக நடந்து கொள்வீர்கள். நிறைய நல்ல அனுபவங்களையும் பெறுவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். மாணவர்கள், இளைஞர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் தேடி வரும். காரிய தடை விலகும். அமோகமான வெற்றி வாகை சூட இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். இறை வழிபாடு செய்யுங்கள். மனதிற்கு அமைதி கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோர்வாக இருப்பீர்கள். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். செய்யும் வேலையில் பின்னடைவு வர வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் மூலம் சின்னச் சின்ன தொந்தரவுகள் வரலாம். எதுவாக இருந்தாலும் நின்று நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். எந்த விஷயத்திலும் அவசரம் கொள்ள வேண்டாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கவனம் கூடுதலாக தேவைப்படுகிறது. சின்னச் சின்ன மறதியினால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. வேலையில் முழு கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தை பொறுத்தவரை நிதானம் தேவை. உங்களுடைய நீண்ட நாள் வாடிக்கையாளர்களை இழக்கக் கூடாது. அவசரப்பட்டு எதுவும் பேசாதீர்கள் நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன ஏமாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது. அதிக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். உங்களுடைய கடமையை மட்டும் சரியாக செய்து முடியுங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கான நல்ல நேரம் வரும். நீண்ட தூர பயணங்கள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும். கட்டுமான தொழில் இலாபம் பெறும். விவசாயிகளுக்கு நன்மைகள் நடக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கவலை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த முடியாது. எல்லா விஷயங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, கண்களை மூடி தூங்க வேண்டும் என்று கூட சில பேர் விரும்பலாம். எதுவாக இருந்தாலும் மனதிற்குப் பட்டதை செய்யுங்கள். அடம் பிடித்து, வீம்புக்காக இன்று ஒரு வேலையை செய்யக்கூடாது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். காரிய தடை விலகும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் பேச தொடங்கலாம். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டு. நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான சமூகமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். காரிய தடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். தேவையில்லாத பகை விலகும். புதிய நண்பர்களின் அறிமுகம், புது அனுபவத்தை கொடுக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள் செய்யலாம். பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். நன்மைகள் உங்களைத் தேடி வரும். வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பயம் பதட்டம் இருக்கும். புது வேலைகளை தொடங்கும் போது முழு நம்பிக்கை வராது. இந்த வேலையை செய்ய முடியுமா, செய்ய முடியாதா என்ற தடுமாற்றத்தோடு இருப்பீர்கள். அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடக்கவும். இறை நம்பிக்கையோடு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிச்சயம் வெற்றி தரும். கவலை வேண்டாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். அதேபோல நேர்வழியில் இருந்தும் தவற மாட்டீர்கள். உங்களுடைய நேர்மை உங்களை நல்வழிப்படுத்தும். நிதி நிலைமை கொஞ்சம் சீராக இருக்கும். ஒரு சில நாட்களில் அதுவும் சரியாகிவிடும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 24.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை தவறாமல் செய்து முடிப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும்.…

71 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 22.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராகும். வங்கி கடன் முயற்சிக்கலாம். வாங்கிய கடனை திருப்பி அடைப்பதற்கு நல்ல…

50 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 21.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி அடையும். காரிய தடை விலகும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் சுப…

50 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. வீண் விரைய செலவு ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத நண்பர்கள் உறவுகளிடம் இருந்து விலகி நிற்பது…

59 0 0