உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அநோஜனின் விடுதலையை வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக வடக்கு ஆளுநர் வாக்குறுதி

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
89 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில், அவருக்கு கருணை வழங்கி தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுவை மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தேசிய மகா சபை – வடக்கு மாகாண ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண ஒன்றியம் சார்பில் இக்கோரிக்கை மனு, இன்று (22.09.2026) செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

‘சிவராசா அனோஜனுக்கான கருணை மனு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த மனுவில், சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையொருவரின் நிலைமை அவரது குடும்பத்தினருக்கும் உயிரின் பெறுமதியை மதிக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் உடனடி மற்றும் கருணையுடனான கவனத்தை செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்துடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் இராஜதந்திர, சட்ட மற்றும் மனிதாபிமான வழிமுறைகளின் ஊடாகச் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, தண்டனையைத் தளர்த்துதல், மாற்றுதல் அல்லது அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்கான சட்டபூர்வ நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட ஆளுநர், இதனை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு உடனடியாக அனுப்பி வைத்து, உரிய கவனத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் நேற்று திங்கட்கிழமை (21.09.2026) சிவராசா அனோஜனின் பெற்றோரை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்ததுடன், அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக சட்டரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்திருந்தார். 

இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் அனோஜன் சிவராசாவின் விவகாரத்தை இலங்கைத் தூதரகம் ஊடாகவும், சவூதி அரேபிய அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாகவும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கை மனுவும் ஜனாதிபதியின் கவனத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டியும் 4 உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி கோர விபத்து.!

பருத்தித்துறை – தும்பளை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் நான்கு உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளமையுடன், அவரது தாய் மற்றும் தந்தையரும் காயங்களுக்குள்ளாகிப்…

114 0 0
இலங்கை செய்திகள்

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் திறந்து வைப்பு!

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மக்கள்…

163 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் விபத்து!

யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் இன்று (22) இரவு 7 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக மகிழுந்து ஒன்று, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இற்கும் மேற்பட்ட…

152 0 0
இலங்கை செய்திகள்

கூகுள் வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு அபகரிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு மீள வழங்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தில் வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களின் வசமுள்ள காணிகளை மக்களுக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி.…

142 0 0