உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் கஜேந்திரகுமார் கைது

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
44 பார்வைகள்

பண்டாரவளை மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் கஜேந்திர குமார், நிதி மோசடி மற்றும் போலி ஆவணத் தயாரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை மாநகர சபையின் கடைத் தொகுதியில் எட்டு வர்த்தக நிலையங்களை நீண்ட கால குத்தகை அடிப்படையில் பெற்றுத் தருவதாக தெரிவித்து நகரசபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இருவர் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ஐந்து கோடி ரூபா அளவில் மோசடி செய்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று(22) காலை பண்டாரவளை பொலிஸ் பிரிவின் குற்றவியல் புலனாய்வுப் பிரிவுக்கு (CSIB)வந்தபோது கைது செய்யப்படுள்ளார்.

குறித்த ஊழியர்கள் இருவரும் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்ட பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மாநகர சபையின் வருமான வரி பரிசோதகர்கள் இருவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பண்டாரவளை நகர சபையின் முன்னாள் பிரதி மேயர் மற்றும் மாநகர சபை ஆணையாளர் ஆகியோர் தேடப்பட்டு வந்த நிலையில், முன்னாள் பிரதிமேயர் நேற்று முன்தினம்(20.09.2026) கைது செய்யப்பட்டிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்!!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை இளைஞன் அனோஜன் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த…

24 0 0
இலங்கை செய்திகள்

“ஸ்மைல் பிளீஸ்” : சாமர சம்பத் எம்.பி ஜனாதிபதியை வலியுறுத்தல்

ஜனாதிபதி பொதுக்கூட்டங்களில் முன்னாள் தலைவர்களை விமர்சித்து கோபமாக உரையாற்றுவதைத் தவிர்த்து, மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் மக்களை சந்திக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றில்…

26 0 0
இலங்கை செய்திகள்

அநோஜனின் விடுதலையை வலியுறுத்தி சமர்ப்பிக்கப்பட்ட மனுவை ஜனாதிபதிக்கு உடனடியாக அனுப்பி வைப்பதாக வடக்கு ஆளுநர் வாக்குறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் தொடர்பில், அவருக்கு கருணை வழங்கி தண்டனையைத் தளர்த்த அல்லது உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை…

25 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை அல்-பஹ்றியா தேசிய பாடசாலையின் புலமைப்பரிசில் பரீட்சை சாதனையாளர்களுக்கு கௌரவிப்பு!

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில்…

27 0 0