உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

கதிர்காம யாத்திரிகர்களுடன் நடைபயணமாகச் சென்ற நாயைத் தாக்கிய இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
28 பார்வைகள்

கதிர்காம யாத்திரிகர்களுடன் நடைபயணமாகச் சென்ற ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்பட்ட நாயைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞனுக்கு எதிரான வழக்கு நிறைவுக்கு வந்துள்ளதுடன், அவருக்கு 100 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இடம்பெற்ற இச் சம்பவத்தைத் தொடர்ந்து, கல்முனை தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன், 2026 ஜூன் 28 ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது, சந்தேகநபர் 50,000 ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு அண்மையில் (செப்டம்பர் 07) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் மன்றில் ஆஜரானார்.

இதன்போது, சுப்பிரமணியம் என்ற நாயைத் தாக்கிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட சந்தேகநபருக்கு 100 ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறைத்தண்டனையை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைத்தும் நீதவான் தீர்ப்பளித்தார். அபராதத் தொகையைச் செலுத்தியதைத் தொடர்ந்து, சந்தேகநபர் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனைக் காப்பாற்ற பிரதி சபாநாயகர் தலைமையிலான குழு சவூதி பயணம்! – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றும் பொருட்டு, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தலைமையில் அரச மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அடங்கிய…

24 0 0
இலங்கை செய்திகள்

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் எல்லை மீறிய கட்டுமானங்களுக்கு தடை.!

திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தேவையற்ற புதிய கட்டுமானப் பணிகளுக்கு எதிராகத்…

17 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் தொடர்பான அவதூறு கருத்துக்களை எதிர்த்து வழக்குத் தாக்கல்!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற ஹிஜாப் விவகாரம் தொடர்பாகவும், அவருக்கு எதிராக வெளியாக்கப்பட்ட அவதூறான மற்றும் சமூக மோதலைத்…

25 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 15 பேர் குற்றவாளிகள்.!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக சதித்திட்டம் தீட்டியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24…

25 0 0