உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

அனோஜனின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய பத்தரமுல்லே சீலரத்ன தேரர்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
21 பார்வைகள்

சவூதி அரேபியாவில் தண்டனை எதிர்கொண்டு வரும் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் வீட்டிற்கு ஜனசெத பெரமுனவின் தலைவரும் தேரருமான பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் இன்று (22) நேரில் விஜயம் செய்து குடும்பத்தினருக்குத் தமது ஆறுதலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

கல்முனை, நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள அனோஜனின் இல்லத்திற்குச் சென்ற அக் குழுவினர், குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்ததுடன், அனோஜனைத் தண்டனையிலிருந்து மீட்பதற்காகத் தாம் முன்னெடுத்து வரும் முயற்சிகள் குறித்துத் தெளிவுபடுத்தினர்.

கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன் போராட்டம்
இச் சந்திப்பின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பத்தரமுல்லே சீலரத்ன தேரர், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி நாளை கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் நாட்களில் கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்திற்கு நேரில் சென்று அனோஜன் தொடர்பான விசேட கோரிக்கை மகஜர் ஒன்றைக் கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்ட தேரர், அதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை (28) கொழும்புக்கு வருகை தருமாறு அனோஜனின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்தார். இக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அனோஜனின் குடும்பத்தினரும் அன்றைய தினம் கொழும்புக்கு வருகை தரச் சம்மதம் தெரிவித்தனர்.

இதன்போது ஊடகங்கள் முன் அழுது புலம்பிய அனோஜனின் தாயார், தனது மகனை மீட்டுத் தருமாறு இலங்கை மக்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்ததுடன், தனது மகன் செய்த தவறுக்காக மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரி நின்றார்.

இச் சந்திப்பில் கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரும் கலந்துகொண்டதுடன், தமிழ் – சிங்கள மொழிபெயர்ப்பு உதவிகளையும் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கதிர்காம யாத்திரிகர்களுடன் நடைபயணமாகச் சென்ற நாயைத் தாக்கிய இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.!

கதிர்காம யாத்திரிகர்களுடன் நடைபயணமாகச் சென்ற ‘சுப்பிரமணியம்’ என அழைக்கப்பட்ட நாயைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞனுக்கு எதிரான வழக்கு நிறைவுக்கு வந்துள்ளதுடன், அவருக்கு…

24 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது.!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை நாட்டுக்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட சீன நாட்டுப் பிரஜை…

29 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மட்டத்தில் பதக்கங்களை குவித்த வட்டு இந்துக் கல்லூரி.!

அகில இலங்கை தேசிய மட்ட தமிழ்மொழித் தினப் போட்டி 2026 மற்றும் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் கலந்துகொண்ட யாழ்.…

30 0 0
இலங்கை செய்திகள்

அரசாங்கத்தின் ஊழல்கள் நடக்கும் போது ஜனாதிபதி கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்.!

அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் இடம்பெறும் போது ஜனாதிபதி கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றம்…

32 0 0