உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

லொக்கு பெட்டியின் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
23 பார்வைகள்

பணப்புழக்கச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘லொக்கு பெட்டி’ என அழைக்கப்படும் சுஜீவ ருவான் குமார டி சில்வாவிற்குச் சொந்தமான சுமார் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வெலிப்பன்ன பகுதியில் அமைந்துள்ள 15 பேர்ச் காணியும், அதில் கட்டப்பட்டுள்ள இருமாடி வீடும் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைக்கப்பட்ட பணத்தைக் கொண்டே இந்தச் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் கிராமங்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளை துரிதப்படுத்துக.!

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்…

26 0 0
இலங்கை செய்திகள்

யாழ். சிறைச்சாலையில் இருந்து வீடு திரும்பியவர் திடீரென உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்ட கைதி ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்ட அன்றைய தினம் திடீரென மயங்கி விழுந்ததால் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த…

27 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு எதிரான தீர்ப்பு வாசிப்பு ஆரம்பம்.!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற…

21 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 650 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இரண்டு கைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்கு மாகாண வடக்கு…

17 0 0