உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ஸஹீர் கானுக்கு புதிய பொறுப்பு!

விளையாட்டுச் செய்திகள் 16 மணி நேரம் முன்
31 பார்வைகள்

2027 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடருக்கு முன்னதாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸஹீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 17 ஆண்டுகளாகச் சென்னை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றி வந்த ஸ்டீபன் பிளெமிங் ஜூலை மாதத்துடன் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், ஐந்து முறை ஐ.பி.எல் செம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த புதிய நியமனத்தை அறிவித்துள்ளது.

இந்தியாவின் 2011 உலகக் கிண்ண வெற்றி அணியில் இடம்பெற்றிருந்த ஷஹீர் கான், இதற்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளில் பயிற்றுவிப்பாளர் மற்றும் கிரிக்கெட் முகாமையாளர் பொறுப்புகளை வகித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் பணிப்பாளராகவும் பின்னர் உலகளாவிய கிரிக்கெட் அபிவிருத்தித் தலைவராகவும் பணியாற்றிய அவர், லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராகவும் (Mentor) செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை–இங்கிலாந்து ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியானது செஸ்டர்-லே-ஸ்ட்ரீட் (Chester-le-Street) மைதானத்தில்…

28 0 0
விளையாட்டுச் செய்திகள்

6 மாதங்களில் முறிந்துபோன கிரிக்கட் வீரரின் நிச்சயம்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருக்கும் பிரித்வி ஷா, சில ஆண்டுகளுக்கு முன் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கினார். அதன்பின் உள்ளூர் போட்டிகளில் கவனம்…

60 0 0
விளையாட்டுச் செய்திகள்

30 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார் இந்திய வீரர் அபிஷேக் சர்மா

டெஸ்ட் விளையாடும் நாட்டைச் சேர்ந்த வீரர்களில் அதிவேக இருபதுக்கு 20 சர்வதேச சதத்தை அடித்து இந்தியாவின் அபிஷேக் சர்மா சாதனை படைத்துள்ளார். புதுடெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில்…

76 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கைக்கு எதிரான T-20 தொடரை 2:0 எனும் கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது!

இரண்டாவது டி:20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் டி:20…

47 0 0