உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள்; சவூதி மன்னருக்கு சங்குக் கூட்டணியின் தலைவர்கள் அவசர கடிதம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
19 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு அல்லது அவரது தண்டனையைக் குறைக்குமாறு கோரி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சஊதுக்கு அவசர கடிதம் ஒன்றை நேற்று அனுப்பியுள்ளனர்.

சிவராசா அனோஜன் செய்த தவறை தாங்கள் எந்த வகையிலும் நியாயப்படுத்தவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ள தலைவர்கள், அவர் அறியாமையினாலோ அல்லது உணர்ச்சிவசப்பட்ட ஒரு தருணத்திலோ சமூக வலைத்தளத்தில் தவறான கருத்தைப் பதிவிட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அனோஜன் தனது தவறை உடனடியாக உணர்ந்து அதற்காக உண்மையாக மன்னிப்புக் கோரியுள்ளமையையும், தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றமையையும் அவர்கள் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஸ்லாம் மார்க்கம் கருணையையும் மன்னிப்பையும் உயர் பண்புகளாகப் போற்றுவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், “பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுபவர்கள் மீது சொர்க்கத்தில் உள்ள (அல்லாஹ்) கருணை காட்டுவான்” என்ற நபிமொழியை நினைவூட்டியுள்ளனர்.

அனோஜனின் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பத்தினரின் நிலையைக் கருத்திற்கொண்டு, மனிதநேய அடிப்படையில் அவரது உயிரைக் காப்பாற்றுமாறு சவூதி மன்னரிடமும் அரசிடமும் அவர்கள் பணிவுடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் செல்வம் அடைக்கலநாதன் (தலைவர் – ரெலோ), த.சித்தார்த்தன் (தலைவர் – புளொட்), சுரேஷ் பிரேமச்சந்திரன் (தலைவர் – ஈ.பி.ஆர்.எல்.எவ்.), எம். சந்திரகுமார் (பொதுச்செயலாளர் – சமத்துவக் கட்சி), எஸ். நவீந்திரா (தலைவர் – ஜனநாயகப் போராளிகள் கட்சி) ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட சிறுவர், பெண்கள் அபிவிருத்தி குழுக் கூட்டம்.!

மன்னார் மாவட்ட சிறுவர், பெண்கள் அபிவிருத்தி குழு, சமூக உளநலம், போதை தடுப்பு மன்றக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலக…

18 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நல்லூரடியில் போராட்டம்.!

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி இன்றையதினம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஐயப்ப…

30 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் படகுச் சவாரி நிறுத்தம்.!

நுவரெலியாவில் தற்போதும் நிலவும் மழை, காற்று மற்றும் பனிமூட்டம் காரணமாக படகுச் சவாரியை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் நுவரெலியா கிரகரி வாவி பகுதியில்…

25 0 0
இலங்கை செய்திகள்

கல்லுண்டாயில் குப்பை கொட்டுவதற்கு வந்த வாகனங்களால் பரபரப்பு.!

கல்லுண்டாய் குப்பை மேட்டு பகுதியில் அத்துமீறி குப்பை கொட்டுவதற்கு வந்த வாகனங்களால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,தொடர்ச்சியாகவே கல்லுண்டாய் குப்பை மேடானது தீப்பற்றி எரிகிறது.…

25 0 0