உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே போக்குவரத்தில் ஈடுபட்ட பேருந்துகள்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
9 பார்வைகள்

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் பொலிஸாரால் நேற்று முன்தினம் (20.09.2026) ஞாயிற்றுக்கிழமை இரவு கண்டறியப்பட்டதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

இந்நடவடிக்கையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பறக்கும் படையினர் மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து செயற்பட்டனர்.

பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி ஈடுபடும் பேருந்துகளை அடையாளம் கண்டு, அவற்றின் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களைப் பரிசோதித்து, சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதே இச்சோதனை நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

இதன்போது உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட இரண்டு பேருந்துகள் கண்டறியப்பட்டன. அவை தொடர்பில் பொலிஸாரால் நீதிமன்றுக்கு முற்படுத்த திகதி குறிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட அதேவேளை தற்காலிகமாக நேற்றையதினம் சேவையைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டன.

இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சில பேருந்துகள், உரிய வழித்தட அனுமதிப்பத்திரங்கள் இல்லாத காரணத்தால் மாற்று மார்க்கங்கள் ஊடாகச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.

தற்போது உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் அனைத்து பேருந்து உரிமையாளர்களும் இயக்குநர்களும் உடனடியாக இவ்வாறான சேவைகளை நிறுத்தி, தேவையான வழித்தட அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதியும் இதேபோன்ற சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு, உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட இரண்டு பேருந்துகள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நல்லூரடியில் போராட்டம்.!

சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி இன்றையதினம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஐயப்ப…

26 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் படகுச் சவாரி நிறுத்தம்.!

நுவரெலியாவில் தற்போதும் நிலவும் மழை, காற்று மற்றும் பனிமூட்டம் காரணமாக படகுச் சவாரியை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் நுவரெலியா கிரகரி வாவி பகுதியில்…

23 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குங்கள்; சவூதி மன்னருக்கு சங்குக் கூட்டணியின் தலைவர்கள் அவசர கடிதம்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு அல்லது அவரது தண்டனையைக் குறைக்குமாறு கோரி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின்…

15 0 0
இலங்கை செய்திகள்

கல்லுண்டாயில் குப்பை கொட்டுவதற்கு வந்த வாகனங்களால் பரபரப்பு.!

கல்லுண்டாய் குப்பை மேட்டு பகுதியில் அத்துமீறி குப்பை கொட்டுவதற்கு வந்த வாகனங்களால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,தொடர்ச்சியாகவே கல்லுண்டாய் குப்பை மேடானது தீப்பற்றி எரிகிறது.…

23 0 0