உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

மக்கள் ஆதரவை இழந்த அரசியல்வாதிகள் தான் கூக்குரலிடுகின்றனர்.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
26 பார்வைகள்

கடந்த காலங்களிலே நீதிபதிகளைத் தங்களுக்குச் சார்பான தீர்ப்புகளை வழங்குமாறு பல அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று எந்தவொரு அரசியல் அழுத்தமும் கிடையாது. அவர்கள் நீதியாக, சுதந்திரமான கட்டமைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதன் வெளிப்பாடுகள் தான் இன்று கைதுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

அரசு சரியாகச் செயல்படுகின்றது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். சர்வதேச ரீதியான அங்கீகாரத்தோடு இந்த அரசு பயணித்துக் கொண்டிருப்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, ‘மக்கள் நேசிக்கும் அரசு’ என்பதை நாங்கள் இந்த எதிர்க்கட்சியினருக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற கைதுகள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பலவிதமான கருத்துக்களை மக்கள் மத்தியிலே குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த விசாரணைகள் தொடர்பாக இவர்கள் இதற்கு முன்னர் பல தடவைகள் விசாரணை அதிகாரிகளிடம் சென்று தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தார்கள். இது நேற்றோ அல்லது அதற்கு முந்தைய தினமோ இடம்பெற்ற விசாரணை கிடையாது. மிக நீண்ட காலமாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தன. ஆனால் இவர்கள் ஏதோ ஒரு காரணத்தை அல்லது தங்களது அரசியல் பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு தப்பித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று, இந்த சட்டங்கள் பொதுவானதாகவும் மக்களுக்கு சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயல்படுகின்ற ஒரு சட்டக் கட்டமைப்பை நாங்கள் இன்று உருவாக்கியிருக்கின்றோம்.

காவல்துறையினர் சுயாதீனமாகத் தங்களது விசாரணைகளை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள். விசாரணை அதிகாரிகளுக்கு எந்தவொரு அழுத்தத்தையும் நாங்கள் பிரயோகிக்கவில்லை. அரசியல் அழுத்தங்கள் இல்லாத ஒரு கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம். அரச அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளைச் சுதந்திரமாக இன்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதிலே நீதிப் பிரிவை நாங்கள் விசேடமாகக் குறிப்பிட வேண்டும். கடந்த காலங்களிலே நீதிபதிகளைத் தங்களுக்குச் சார்பான தீர்ப்புகளை வழங்குமாறு பல அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று எந்தவொரு அரசியல் அழுத்தமும் கிடையாது; அவர்கள் நீதியாக, சுதந்திரமான கட்டமைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விசாரணைகளை அவர்கள் விசாரித்து, அதன் வெளிப்பாடுகள் தான் இன்று கைதுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆகவே இதிலே எந்தவொரு அரசியல் பழிவாங்கலும் கிடையாது. இந்தக்க கைதுகள் விசாரணை அடிப்படையிலேயே தான் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அது யாராக இருந்தாலும், எவராக இருந்தாலும், தங்களது ஊழலுக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட அநீதிக்கு எதிரான விசாரணை சுயாதீனமாக, சுதந்திரமாக இடம்பெற்று அதற்கான தண்டனைகள் இப்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எதிர்க்கட்சிகள் கூறுகின்றவாறு, முன்னர் தங்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் இடம்பெறப் போவதாக அரசாங்கம் குறிப்பிட்டதாகவும், வாக்குறுதிகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் அது நடைபெறவில்லை என்று கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்று கைதுகள் இடம்பெறும்போது “அரசியல் பழிவாங்கல்” என்று அதற்குப் பெயர் சூட்டியிருக்கின்றார்கள். ஆகவே இந்த அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை மக்கள் நன்றாகவே அறிந்திருக்கின்றார்கள். தேசிய மக்கள் சக்தி அரசு மேற்கொள்கின்ற அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் ஆதரவை இழந்த இந்த அரசியல்வாதிகள் தான் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகின்ற இன்னுமொரு விடயம் தான், ‘அரசியல் செல்வாக்கு மற்றும் மக்கள் பலம் இந்த அரசுக்குக் குறைந்து கொண்டு வருகின்றது’ என்பதாகும். இப்படி ஒரு கருத்தையும் உருவாக்கியிருக்கின்றார்கள். இன்று சுதந்திரமான ஒரு கட்டமைப்பின் ஊடாகத் தான் இந்தக் கைதுகள் இடம்பெறுகின்றன. எங்களுக்கு வருகின்ற தேர்தலில் மிகப்பெரிய அளவிலான வாக்குகளை நாங்கள் பெற இருக்கின்றோம் என்பது தான் எனது கருத்து.

மக்களின் ஆதரவு இப்போது அதிகரித்திருக்கின்றது. உதாரணமாகச் சொல்லப் போனால், ஒரு மாவட்டத்திலே இரண்டு இடங்களில் ஜனாதிபதி அவர்கள் வருகை தந்து கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். அணி அணியாக மக்கள் திரண்டு கொண்டு அந்தக் கூட்டத்தைப் பார்ப்பதற்காக வந்திருக்கின்றார்கள். அவர்கள் ஜனாதிபதியின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த அரசின் நடவடிக்கைகளை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இந்த அரசு சரியாகச் செயல்படுகின்றது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். சர்வதேச ரீதியான அங்கீகாரத்தோடு இந்த அரசு பயணித்துக் கொண்டிருப்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே, ‘மக்கள் நேசிக்கும் அரசு’ என்பதை நாங்கள் இந்த எதிர்க்கட்சியினருக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றோம். அரசுக்கான பயணம் மற்றும் அரசின் மீதுள்ள நம்பிக்கை இன்று மிக அளவிலான அதிகரிப்போடு இருக்கின்றது என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரம்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜன் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட…

23 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் கைது.!

முன்னாள் ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவினால்…

18 0 0
இலங்கை செய்திகள்

வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே போக்குவரத்தில் ஈடுபட்ட பேருந்துகள்.!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் பொலிஸாரால் நேற்று முன்தினம் (20.09.2026) ஞாயிற்றுக்கிழமை இரவு…

7 0 0
இலங்கை செய்திகள்

அநுரவின் கடந்த இரண்டு வருட ஆட்சி தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றமே.!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கடந்த இரண்டு வருட ஆட்சி என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பெரும் ஏமாற்றமே என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக்…

24 0 0