உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

அனோஜனின் உயிரைப் பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
16 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனின் பெற்றோர் நேற்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

சிவராசா அனோஜனின் தற்போதைய இக்கட்டான நிலைமை குறித்து ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துரைத்த அவரது பெற்றோர், உடனடியாகத் தலையிட்டுத் தமது மகனின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தனர்.

பெற்றோரின் கோரிக்கையைக் கவனமுடன் செவிமடுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக அரசு இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது என்றும், அதற்காகச் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் உரிய தலையீடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக, சவூதி அரசரிடம் இது தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூலக் கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிடுகையில், அனோஜன் தொடர்பான சம்பவம் குறித்து சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக அமைச்சு தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருகின்றது என்றும், சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிகள் ஊடாக அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் சிவராசா அனோஜனின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜன் விவகாரம் இன்று நாடாளுமன்றில்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை…

18 0 0
இலங்கை செய்திகள்

மக்கள் ஆதரவை இழந்த அரசியல்வாதிகள் தான் கூக்குரலிடுகின்றனர்.!

கடந்த காலங்களிலே நீதிபதிகளைத் தங்களுக்குச் சார்பான தீர்ப்புகளை வழங்குமாறு பல அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று எந்தவொரு அரசியல் அழுத்தமும் கிடையாது. அவர்கள் நீதியாக, சுதந்திரமான…

22 0 0
இலங்கை செய்திகள்

வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கைப்பந்து அணி தேசிய ரீதியில் சாதனை!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் ஒன்றான வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி 2026ம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான…

42 0 0
இலங்கை செய்திகள்

“மாற்றம்” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசும் இனவாதப் போக்கிலிருந்து விலகவில்லை – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள்; வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம்…

32 0 0