உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

இன்றைய ராசி பலன்கள் – 22.09.2026

ராசி பலன்கள் 3 மணி நேரம் முன்
31 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராகும். வங்கி கடன் முயற்சிக்கலாம். வாங்கிய கடனை திருப்பி அடைப்பதற்கு நல்ல காலம் கைகூடி வரும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் இருக்காது. அந்தந்த வேலைகள் அந்தந்த நேரத்தில் சரியாக நடந்து முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்றி விடுவீர்கள். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். புது முயற்சிகளை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. விநாயகர் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நேரத்தை வீணடிக்க கூடாது. பிரச்சினை என்று வந்தால் உங்களுக்கு துணையாக நிச்சயம் நாலு பேர் வருவார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் பிரச்சினைகளை வராமல் பார்த்துக் கொள்வதே இன்றைய நாளுக்கான சாமார்த்தியம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். இறை நம்பிக்கை அதிகரிக்கும். முருகர் வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். தேவையில்லாத பிரச்சினைகள் நீங்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்க்கைத் துணை மீது அக்கறை காட்டுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். தவறான புரிதல் சரியாகும். வண்டி வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். ப்ரமோஷனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும். வருமானம் அதிகரிக்கும். வராத கடன் வசூல் ஆகும். நிதிநிலைமை சீராகும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். சந்தோஷம் பெருகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அடக்கமான நாளாக இருக்கும். ஆர்ப்பாட்டம் இல்லாத தன்னடக்கத்தோடு நாளை எதிர்கொள்வீர்கள். இந்த அமைதி உங்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கப் போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும். நண்பர்களின் உதவியால் நிறைய நல்ல விஷயங்களை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பயம் பதட்டம் இருக்கும். புது முடிவுகள் மேற்கொள்ளும் போது ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். அனுபவசாலிகளின் பேச்சைக் கேளுங்கள். யாரிடமும் முன்கோபம் வேண்டாம். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கவலை இருக்கும். உடல் சோர்வு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த முடியாது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புது வேலைகள் தொடங்குவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும். உயரதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாகும். ஆனாலும் சமாளிக்க கூடிய தெம்பு இருக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 21.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி அடையும். காரிய தடை விலகும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் சுப…

31 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. வீண் விரைய செலவு ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத நண்பர்கள் உறவுகளிடம் இருந்து விலகி நிற்பது…

43 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய அனுபவங்களும் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து…

48 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பலான நாளாக இருக்கும். மன கவலையால், வேலையில் கவனம் செலுத்த முடியாது. சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.…

59 0 0