உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

“மாற்றம்” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசும் இனவாதப் போக்கிலிருந்து விலகவில்லை – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
25 பார்வைகள்

சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள்; வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம் வாழ வேண்டிய நிலை தொடருகின்றது” என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

​கரைச்சி பிரதேச சபையின் உள்ளூராட்சி வாரத்தின் இறுதிநாள் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

​சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை அவமதித்து எழுதுவதும், அதற்குப் பதிலாக இஸ்லாமியர்களின் நபிகள் நாயகம் அவர்களை அவமதித்து எழுதுவதும் இரண்டுமே ஏற்றுக்கொள்ள முடியாத செயல்கள்தான். ஆனால், ஒரு பதிவுக்குப் பதிலாக மற்றொரு பதிவு எழுதப்பட்ட நிலையில், இன்று ஒரு மனிதனின் உயிரே கேள்விக்குறியாகியுள்ளது. இவர் எழுதினார், அவர் பதில் எழுதினார். இவருக்குத் தலை போகிறது, அவர் வீட்டிலேயே இருக்கிறார். இதில் என்ன நியாயம் இருக்கிறது?

​அனோஜனுக்கு எதிரான பதிவை மொழிபெயர்த்துக் கொடுத்தவர்களும் தமிழ் பேசும் சகோதர இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதன் தாக்கம் தமிழ்–முஸ்லிம் உறவில் ஆழமான விரிசலை ஏற்படுத்தக்கூடும். சிறிய பொறிகளே பெரும் தீயாக மாறுகின்றன. எனவே, அனோஜன் விடுதலை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்; அனைவரும் அதற்காகப் பிரார்த்திக்க வேண்டும்.

​மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசும் கடந்த கால அரசுகளைப் போலவே இனவாதப் போக்கைக் கையிலெடுத்திருக்கிறது. அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்த தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் நினைவேந்தலில் ஒலிபெருக்கிப் பெட்டிகளைக் கூட பொலிஸார் பறித்துச் செல்லும் நிலையே காணப்படுகிறது. அப்படியானால் இந்த நாட்டில் ஜனநாயகம் எங்கே உள்ளது?” எனக் கேள்வி எழுப்பினார்.

​கரைச்சிப் பிரதேச சபையின் உள்ளூராட்சி வார நிகழ்வுகளின் தொடர்ச்சியாக கலை நிகழ்வுகளும், வட்டார ரீதியான போட்டி நிகழ்வுகளும், நூல் அறிமுகங்களும், சிறப்பாக நடைபெற்றதுடன், மூன்று நாட்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சியும், நடைபெற்றது. இறுதி நாள் நிகழ்வில் வெற்றியாளர்களுக்கான பரிசில்களும், பயனாளிகளுக்கான வாழ்வாதர உதவித் திட்டங்களும் வழங்கப்பட்டன.

​கரைச்சிப் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக கரைச்சி பிரதேச செயலாளர் திருமிகு. தவச்செல்வம் முகுந்தன், கண்டாவளை பிரதேச செயலாளர் திருமிகு. தங்கவேலாயுதம் பிருந்தாகரன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகப் பொறியியலாளர் திருமிகு. கதிரைமலைநாதன் கடம்பசீலன், துணுக்காய் வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் திரு. செல்வராஜ் செல்வகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கைப்பந்து அணி தேசிய ரீதியில் சாதனை!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் ஒன்றான வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி 2026ம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான…

36 0 0
இலங்கை செய்திகள்

தலைமன்னார் கடற்பகுதியில் விபத்திற்குள்ளான மீன்பிடிப் படகில் இருந்த இரு மீனவர்கள் மீட்பு

தலை மன்னார் வடக்கு கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு…

22 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக சகல முயற்சிகளையும் மேற்கொள்வேன்! : சஜித் வாக்குறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து முயற்சிகளையும் தான் உறுதியாக மேற்கொள்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

24 0 0
இலங்கை செய்திகள்

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயி@ரிழப்பு!

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயி@ரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று 11 மணி அளவில் இடம் பெற்றுள்ளது T.R.I செங் கூம்ஸ் தோட்டத்தை சேர்ந்த…

28 0 0