உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

தலைமன்னார் கடற்பகுதியில் விபத்திற்குள்ளான மீன்பிடிப் படகில் இருந்த இரு மீனவர்கள் மீட்பு

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
25 பார்வைகள்

தலை மன்னார் வடக்கு கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், கடற்படையினரால் இன்று (21) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போதே இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

யாழ்ப்பாணம் குருநகர் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 19 ஆம் திகதி இரண்டு மீனவர்களுடன் புறப்பட்ட ஒரு நாள் மீன்பிடிப் படகு மீண்டும் மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பவில்லை என்றும், அந்தப் படகை கண்டுபிடிப்பதற்கு கடற்படையின் உதவியை வழங்குமாறும், மீன்பிடி மற்றும் நீர் வளங்கள் திணைக்களத்தினால் கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவித்தலுக்கு உடனடியாக பதிலளித்த கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், அந்த கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் படகுகளுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மீன்பிடி மற்றும் நீர்வாழ் வளங்கள் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியது டன், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை தளபத்தியங்களுக்கும் அறியத்தந்தது.

அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம், தலைமன்னாருக்கு வடக்கு கடல் பகுதியில் எரிபொருள் இன்றி செயலிழந்து மிதந்து கொண்டிருந்த ஒரு நாள் மீன்பிடிப் படகு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அதில் இருந்த இரண்டு மீனவர்கள் இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்துன், மேலும் அந்த மீனவர்களும் ஒரு நாள் மீன்பிடிப் படகும் தலைமன்னாருக்கு கொண்டுவரப்பட்டதுடன், அங்கு மீனவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில், இலங்கைக்குச் சொந்தமான கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்திற்குள் ஆபத்தில் சிக்கி தவிக்கும் கடற்படை மற்றும் மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்காக, தயார் நிலையில் உள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கைப்பந்து அணி தேசிய ரீதியில் சாதனை!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் ஒன்றான வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி 2026ம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான…

37 0 0
இலங்கை செய்திகள்

“மாற்றம்” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசும் இனவாதப் போக்கிலிருந்து விலகவில்லை – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள்; வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம்…

28 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக சகல முயற்சிகளையும் மேற்கொள்வேன்! : சஜித் வாக்குறுதி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து முயற்சிகளையும் தான் உறுதியாக மேற்கொள்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

25 0 0
இலங்கை செய்திகள்

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயி@ரிழப்பு!

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயி@ரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று 11 மணி அளவில் இடம் பெற்றுள்ளது T.R.I செங் கூம்ஸ் தோட்டத்தை சேர்ந்த…

29 0 0