உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
21 திங்கள்

அனோஜனின் விடுதலைக்காக சகல முயற்சிகளையும் மேற்கொள்வேன்! : சஜித் வாக்குறுதி

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
24 பார்வைகள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து முயற்சிகளையும் தான் உறுதியாக மேற்கொள்வேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.

அனோஜனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பில் அனோஜனின் தந்தையரான தம்பிராசா சிவராசா, தாயாரான இராசமாணிக்கம் யோகலட்சுமி, சகோதரர் சிவராசா ஹம்சிதன் மற்றும் குடும்ப உறவுகள் கலந்துகொண்டனர்.

அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உடனடியாக இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அனோஜனின் விடுதலை தொடர்பான விவரங்களை விசாரித்தறிந்தார்.

மேலும், சவூதி சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜனுடன் தொலைபேசி வழியாக நேரடியாகப் பேசி நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரையும் தொடர்புகொண்டு அவரது விடுதலைக்காக அரசு தற்போது முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

சாதி, மத பேதங்களுக்கு அப்பால் நின்று அனோஜனின் விடுதலைக்காகச் செய்யக்கூடிய உச்சபட்ச அனைத்து முயற்சிகளையும் தான் தாமதமின்றிச் செய்வேன் என்று அனோஜனின் பெற்றோரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கைப்பந்து அணி தேசிய ரீதியில் சாதனை!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் ஒன்றான வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி 2026ம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான…

36 0 0
இலங்கை செய்திகள்

“மாற்றம்” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசும் இனவாதப் போக்கிலிருந்து விலகவில்லை – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள்; வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம்…

24 0 0
இலங்கை செய்திகள்

தலைமன்னார் கடற்பகுதியில் விபத்திற்குள்ளான மீன்பிடிப் படகில் இருந்த இரு மீனவர்கள் மீட்பு

தலை மன்னார் வடக்கு கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு…

22 0 0
இலங்கை செய்திகள்

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயி@ரிழப்பு!

லிந்துலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான முதியவர் ஒருவர் உயி@ரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று 11 மணி அளவில் இடம் பெற்றுள்ளது T.R.I செங் கூம்ஸ் தோட்டத்தை சேர்ந்த…

28 0 0