உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

இராணுவம் ஆக்கிரமித்துள்ள முள்ளியவளை தபாலக காணியை விடுவித்து நிரந்த கட்டடத்தை அமையுங்கள்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
29 பார்வைகள்

முல்லைத்தீவு – முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்திற்காக ஒதுக்கப்பட்டு தற்போது இலங்கை இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள காணியை 2026ஆம் ஆண்டுக்குள் விடுவித்து அஞ்சல் திணைக்களத்திடம் முறையாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தோடு குறித்த காணியில் முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்திற்கான புதிய நிரந்தரக் கட்டடத்தை 2027ஆம் ஆண்டில் நிர்மாணிக்கத் தொடங்குவதற்குத் தேவையான நிதி மற்றும் நிர்வாக ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அமைச்சரிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது பதிலளித்துள்ளார்.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு அஞ்சல் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(18) இடம்பெற்றது. இந்நிகழ்விலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த 2026.04.08 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்திற்கான காணி விடுவிப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன குறித்த காணியை 2026 ஜூலை மாதத்திற்குள் விடுவிப்பதற்கு இலங்கை இராணுவத்திடமிருந்து வாய்மொழி மூலமான உறுதிமொழி கிடைத்துள்ளதாகவும், காணி விடுவிக்கப்பட்ட பின்னர் அடுத்த ஆண்டில் அங்கு புதிய அஞ்சல் அலுவலகக் கட்டடத்தை நிர்மாணிப்பது தொடர்பில் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும், உறுதியளிக்கப்பட்ட 2026 ஜூலை மாத காலக்கெடு கடந்துள்ளபோதிலும் குறித்த காணி இதுவரையில் விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் குறித்த முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்திற்குரிய காணியினை இராணுவத்தினரிடமிருந்து விடுவித்து, அக்காணியில் அஞ்சல் அலுவலகத்தை அமைதற்கான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடந்த 16.09.2026 அன்று வெகுசன ஊடக பிரதி அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாகவே இன்று சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடமும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இக்கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலம் நெல் கொள்வனவு ஆரம்பம்!

நெல் சந்தைப்படுத்தல் சபை தவிர்ந்து சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு மாவட்ட செயலகம் மூலம் முதற்கட்டமாக 25மில்லியன் ரூபா வழங்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நியாய விலைக்கு…

21 0 0
இலங்கை செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜகான் விஜயம்.!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

21 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் முடக்கம்.!

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு நபர்களுக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களைப் பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பணியகம் முடக்கியுள்ளது. பணத்தூய்தாக்கல்…

35 0 0
இலங்கை செய்திகள்

சவூதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இளைஞனை உயிருடன் மீட்டுத் தருமாறு தாயார் கண்ணீர் கோரிக்கை.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இலங்கை இளைஞரை உயிருடன் மீட்டுத் தருமாறு அவரது…

19 0 0