உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு; உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
13 பார்வைகள்

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பெருந்தொகையான உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தக நிலையத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து நேற்று முன்தினம் (16) முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

இம்முறைப்பாட்டையடுத்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் அவசர உத்தரவிற்கமைய, பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லபீர் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உடனடியாகச் செயற்பட்டு குறித்த கடையில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது, பொதுமக்களின் சுகாதாரத்திற்குத் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வகையில் காலாவதி திகதி முடிவடைந்த பல்வேறு உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்டமைக்காகச் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வர்த்தகர்கள் போராட்டம்.!

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக…

19 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விவாதப் போட்டி.!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் நான்காம் நாளை முன்னிட்டு…

21 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை, இஸ்லாமாபாத் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு.!

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு…

26 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது; வாழ்வாதாரம் கேள்விக்குறி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக…

25 0 0