உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

ஜே.ஆர். ஜயவர்தனவின் 17 வருட புரட்சியே நாடு அன்று வறுமையில் இருந்து விடுபடக் காரணம்.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
38 பார்வைகள்

ஜே.ஆர். ஜயவர்தனவின் 17 வருட காலப் புரட்சியே எமது நாடு அன்று வறுமையில் இருந்து விடுபடக் காரணமாக இருந்தது எனவும், அந்தப் புரட்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதே எமது அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் 120ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு தேசிய நூலக மற்றும் ஆவண சேவைகள் சபைக் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நிகழ்வின் மூலம் புத்திக பத்திரண, ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் ஒரே மேடைக்குக் கொண்டுவர எடுத்த நடவடிக்கைக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது வருட நிறைவு விழா செயற்பாடுகளில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சி என்பது ஒரு ஜனநாயகக் சோசலிசக் கட்சியாகும். சொத்துரிமை இலட்சக்கணக்கான மக்களிடையே பரவலாக்கப்படும்போது, அந்தச் சொத்துரிமை மூலமாக உருவெடுக்கும் அதிகாரமும் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகின்றது. ஒவ்வொரு நபருக்கும் ஒரு சுதந்திர மனிதனாக வாழ்வதற்கும், தனது குடும்பத்தைப் பேணுவதற்கும், சட்டபூர்வமான உரிமைகளை உருவாக்கிக் கொள்வதற்கும் அவசியமான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதே கட்சியின் நோக்கமாகும்.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஜே.ஆர். ஜயவர்தன 17 ஆண்டுகாலப் புரட்சியொன்றை ஆரம்பித்து, அவருக்குப் பின்னர் வந்த ரணசிங்க பிரேமதாஸவுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தைத் தலைகீழாக மாற்றியமைத்தார்.

1977 இல் ஆட்சியைக் கைப்பற்றும் போது 4 பில்லியனாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, வெளியேறும் போது 5 ஆயிரம் பில்லியனாக உயர்ந்தது.” – என்றார்.

மேலும், மஹாவலி திட்டத்தை உருவாக்கிய காமினி திஸாநாயக்க, மஹபொல புலமைப்பரிசிலை அறிமுகப்படுத்திய லலித் அத்துலத்முதலி ஆகியோரின் முயற்சிகளையும் அவர் நினைவுகூர்ந்தார்.

ஜே.ஆர். ஜயவர்தன கொண்டுவந்த 1978 ஆம் ஆண்டின் அரசமைப்புச் சட்டம் மூலமாகவே இறைமை, அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமை என்பன மக்கள் இறைமைக்குள் உள்ளடக்கப்பட்டன என்றும், 126 ஆவது உறுப்புரை மூலம் அடிப்படை உரிமைகளில் நீதிமன்ற அதிகாரத்தைச் செயற்படுத்தும் புரட்சிகரமான உரிமைகள் வழங்கப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வர்த்தகர்கள் போராட்டம்.!

வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிளிநொச்சி நகர் மற்றும் கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக…

19 0 0
இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற விவாதப் போட்டி.!

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் மஸ்கெலியா பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் 2026ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி வாரத்தின் நான்காம் நாளை முன்னிட்டு…

21 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை, இஸ்லாமாபாத் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு.!

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு…

26 0 0
இலங்கை செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது; வாழ்வாதாரம் கேள்விக்குறி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக…

25 0 0