உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
17 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 17.09.2026

ராசி பலன்கள் 11 மணி நேரம் முன்
37 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பலான நாளாக இருக்கும். மன கவலையால், வேலையில் கவனம் செலுத்த முடியாது. சின்னச் சின்ன மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்தவும். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாத வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு தேவையான உதவியை பார்த்து பார்த்து செய்வீர்கள். அன்பு, காதல், பாசம் வெளிப்படும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். கடன் சுமை குறையும். நிதிநிலைமை மேலோங்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். பெருமையான நாளாக இருக்கும். எந்த இடத்தில் அவமானப்பட்டீர்களோ, அந்த இடத்திலேயே உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். எதிரி தொல்லை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. நேரம் வீணாக வாய்ப்பு உள்ளது. பிறகு இந்த நாள் இறுதியில் மொத்த வேலையும் தலைமையில் எழுத்து போட்டு கொண்டு செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிடும். கூடுமானவரை மனதை ஒருநிலைப்படுத்துங்கள். உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடக்க முயற்சி செய்யுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அமைதியான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பெருசாக எந்த பிரச்சினையும் வராது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். ஆர்வம் அதிகமாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். காரிய தடை நீங்கும். வீட்டில் தடைபட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள் அருமையான அனுபவத்தை கொடுக்கப் போகிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். சொத்து பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும் நீண்ட நாள் வராத கடன் வசூல் ஆகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. செய்யும் வியாபாரத்தை இன்னும் விரிவுபடுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளலாம். நல்லது நடக்கும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷத்திற்கு எந்த குறையும் இருக்காது. நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். தேவையில்லாத டென்ஷனில் இருந்து விடுபடுவீர்கள். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். பயணங்களால் நன்மை உண்டு.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தோல்விகளை கண்டு துவண்டு போகக் கூடாது. விடாமுயற்சி இன்று உங்களுக்கு வெற்றியை தேடி தரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக சிந்திப்பீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திறமை வெளிப்படும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுடைய கை ஓங்கி நிற்கும். நிதிநிலைமை சீராகும். சில பேருக்கு, வீட்டிற்கு தேவையான பொன் பொருள் சேர்க்கையும் இருக்கும். சுப காரிய நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்க தொடங்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த டென்ஷன் குறையும். ஆரோக்கியமான சாப்பாடு, ஆரோக்கியமான வாழ்க்கை என்று இந்த நாள் நல்லபடியாக நகர்ந்து செல்லும். வேலையில் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வந்தாலும் அதை சமாளிக்க கூடிய தைரியம் உங்களிடத்தில் இருக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 16.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு இன்று தொட்ட விஷயங்கள் எல்லாம் நல்ல முன்னேற்றத்தை தரும். எதிர்கால சேமிப்புக்கு…

40 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். முழு நம்பிக்கை இல்லாமல் புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். பொறுமையை கையாள்வது அவசியம். அவசர முடிவுகள் எடுக்கக்…

44 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 14.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். வியாபாரத்தை பொருத்தவரை நிதானம் தேவை. நல்ல…

55 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 12.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.…

32 0 0