உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

இன்றைய ராசி பலன்கள் – 14.09.2026

ராசி பலன்கள் 2 மணி நேரம் முன்
34 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். வியாபாரத்தை பொருத்தவரை நிதானம் தேவை. நல்ல இலாபம் இருக்கிறது என்பதற்காக தலைகனத்தோடு செயல்படக் கூடாது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானத்தோடு சிந்தித்து செயல்பட வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இறை வழிபாடு மன அமைதியை தரும். நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று இலாப நஷ்ட கணக்கு பார்த்து வேலை செய்வீர்கள். சுயநலமாக சிந்திப்பீர்கள். வேலையில் சின்னச் சின்ன பிரச்சினைகள் அவ்வப்போது வந்து போகும். வியாபாரத்தில் பிரச்சினைகள் இருக்காது. நஷ்டமாக கூடிய விஷயங்களை கூட லாபமாக மாற்றி விடுவீர்கள். இறை வழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். குடும்ப சந்தோஷம் நிலைத்திருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வேலை அதிகமாக இருக்கும். ஆனால் வேலையை குறித்த நேரத்திற்குள் முடிப்பதற்கு உண்டான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். அந்த முயற்சியில் வெற்றியும் அடைவீர்கள். எல்லா வேலைகளையும் சரிவர முடித்துவிட்டு தேவையான அளவு ஓய்வும் எடுத்துக் கொள்வீர்கள். இந்த நாள் விநாயகரின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று யோசனை அதிகமாக இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது. வியாபாரத்தை கவனத்தோடு நடத்த வேண்டும். வாடிக்கையாளர்களிடம் கோபப்படக்கூடாது. வாடிக்கையாளர்களை கை நழுவ விட வேண்டாம். வேகத்தோடு சேர்த்து விவேகத்துடன் செயல்பட்டால் இந்த நாள் நல்ல நாளாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு அவ்வப்போது இன்று சின்னச் சின்ன சிக்கல்கள் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத பகைவர்களிடமிருந்து விலகியே இருங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். சோம்பேறித்தனத்தை விட வேண்டும். வேலைகளை முடிப்பதில் மட்டும் முழு கவனம் இருக்க வேண்டும். நேரத்தை வீணடிக்க வேண்டாம். தேவையில்லாமல் கைப்பேசி பயன்படுத்தும் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்யுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் சுமாரான நாளாக தான் இருக்கும். மன பயம் பதட்டம் உங்களை சுறுசுறுப்பாக இருக்க விடாது. புது முயற்சிகள் மேற்கொள்ளும் போது சின்னச் சின்ன தடைகள் வரலாம். இன்று காலையிலேயே விநாயகரை மனதார வழிபாடு செய்துவிட்டு வேலையை தொடங்குங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று போராட்டம் நிறைந்த நாளாக தான் இருக்கும். சின்னச் சின்ன எதிர்ப்புகள் சண்டை சச்சரவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை வரும். மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கை தைரியத்தை கைவிடாதீர்கள். இறை நம்பிக்கை உங்களை நிச்சயம் நல்வழிப்படுத்தும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் முன்கோபம் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. கோபத்தால் நிறைய நல்ல விஷயங்களை இழக்கலாம். நிறைய நல்ல உறவுகளை இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். கூடுமானவரை கோபத்தை கட்டுப்படுத்த பத்து நிமிடம் சிவ வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாள் ஆக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வீட்டில் இறை வழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். சில பேருக்கு வீடு மாற்றக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அமையும். நினைத்தபடி வீடு கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். காரிய தடைகள் விலகும். உங்களுடைய வேலை வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். இறை வழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் குடும்ப ஒற்றுமை இருக்கும். சந்தோஷம் பெருகும் நாள் இன்று.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 12.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.…

15 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 11.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்களில் இருந்து விடுபடக்கூடிய நாளாக இருக்கும். பல நாள் பிரச்சினைகள் தீரும். உங்கள் மனம் தெளிவாக சிந்திக்கும். தெளிவான முடிவுகளை எடுத்து, வாழ்க்கையில்…

176 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 10.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வெற்றிவாகை சூடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பதற்கு கூட இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளது. இளைஞர்களுக்கு இன்று ரொம்பவும்…

155 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 09.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நல்ல செய்தி வரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். தேவையில்லாத பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும். பயணங்களின் மூலம்…

145 0 0