உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

இன்றைய ராசி பலன்கள் – 11.09.2026

ராசி பலன்கள் 8 மணி நேரம் முன்
159 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்களில் இருந்து விடுபடக்கூடிய நாளாக இருக்கும். பல நாள் பிரச்சினைகள் தீரும். உங்கள் மனம் தெளிவாக சிந்திக்கும். தெளிவான முடிவுகளை எடுத்து, வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு தேவையான விஷயங்களை செய்வீர்கள். காரியத்தடை விலகும். மகாலட்சுமி வழிபாடு லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களுடைய கடமையிலிருந்து விலகாமல் நடந்து கொள்வீர்கள். வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். சொன்ன வார்த்தையை, சொன்ன நேரத்தில் காப்பாற்றி கொடுப்பீர்கள். அயராது உழைப்பீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். பல பேருக்கு நீங்கள் முன் உதாரணமாக இருக்க போறீங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய வேலையில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவன குறைவு வேண்டாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய பெருமையான நாளாக இருக்கும். பல நாள் செய்ய வேண்டும் என்று, சிந்தித்து வைத்திருந்த ஒரு வேலையை, இன்று செய்வீர்கள். தன்னம்பிக்கை தைரியத்தை இழக்காமல் துணிச்சலோடு செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான அங்கீகாரம் இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனநிறைவு இருக்கும். உங்களுடைய தேவைகள் பூர்த்தியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பல நாள் டென்ஷன் குறையும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும். நல்லது நடக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொறுமையாக சிந்தித்து செயல்படுவீர்கள். கடமைகளை தவற மாட்டீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். மருத்துவ செலவுகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளுடைய எதிர்கால முன்னேற்றத்திற்கு சேமிப்பை தொடங்கலாம். நல்லது நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷத்திற்கு அளவிருக்காது. உற்சாகமாக இருப்பீர்கள். மனதிற்கு பிடித்த நபரை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கை துணையை சந்திக்க கூடிய வாய்ப்பு கூட சில பேருக்கு அமையும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் நடப்பீர்கள். நீண்ட தூர பயணங்கள் மனநிறைவை தரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்யலாம். சேமிப்பு உயர்த்துவதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இந்த நாள் இறுதியில் மன நிறைவுக்கு குறைவிருக்காது.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் இளைஞர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டிய நாள். தேவையில்லாத நண்பர்களிடம் இருந்து விலகியே இருங்கள். எதிரிகளோடு சண்டை வாக்குவாதம் வேண்டாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். துணிச்சலோடு செயல்படுவீர்கள். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். உங்களுக்கு எது தேவையோ, அதை வெளிப்படையாக கேட்டுப் பெற்றுக் கொள்வீர்கள். மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியில் ஒன்று பேசக்கூடிய அளவுக்கு வாய்ப்பை இன்று கொடுக்கவே மாட்டீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுடைய கடமை உணர்ச்சிக்கு இன்று அளவு இருக்காது. உங்களுடைய வேலை வியாபாரம் எல்லாம் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்பதற்காக நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றி பெறும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 10.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வெற்றிவாகை சூடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பதற்கு கூட இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளது. இளைஞர்களுக்கு இன்று ரொம்பவும்…

133 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 09.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நல்ல செய்தி வரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். தேவையில்லாத பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும். பயணங்களின் மூலம்…

130 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 08.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். இன்று முருகர் வழிபாடு செய்து பாருங்கள், உங்கள் பலநாள் கஷ்டத்திற்கு உடனடியாக ஒரு…

141 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 07.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். வேலைகளை சிரமம் பார்க்காமல் செய்யுங்கள். சோம்பேறித்தனம் வேண்டாம்.…

116 0 0