உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி.!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
153 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஏற்பாடு செய்துள்ள “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி நேற்று (09) காலை 8.30 மணிக்கு பாடசாலை கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

பாடசாலை அதிபர் திரு.கே. கங்காதரன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். உதயகுமார் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர்கள் (DEO), உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் (ADE), ISAக்கள், வளவாளர்கள் மற்றும் அனைத்து பாடசாலை அதிபர்களும் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

மேலும், பொதுநிர்வாக முகாமைத்துவப் பிரதி கல்விப் பணிப்பாளர் திரு. எஸ். சுரன்தநாதன், அபிவிருத்திப் பிரதி கல்விப் பணிப்பாளர் திரு. ஏ. நசீர், திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளர் திரு. ஏ.எம். நௌபர்தீன், ஆரம்பக் கல்வி, கல்வி நிர்வாகம் மற்றும் மாணவர் நலன் தொடர்பான பிரதி கல்விப் பணிப்பாளர் திரு. எஸ். அம்ஜெத்கான், பிரதி கல்விப் பணிப்பாளர் திரு. எம்.எஸ். நபீஸ் மொஹமட், PDCT முகாமையாளர் திரு. என். சுதஹரன், DEO/ADE – தமிழ் திரு. எஸ். செல்வம், ISA/EPSI ஒருங்கிணைப்பாளர் திரு. எஸ். சசிகரன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ். சுகிதரன் விசேட அழைப்பாளராகக் கலந்து சிறப்பித்தார்.

அத்துடன், SDEC செயலாளர் திரு. டி. பரணீதரன், OSA செயலாளர் திரு. கே. சஜிந்தன், DO திருமதி டி. ரவிக்குமார், Selvam Construction நிறுவனத்தைச் சேர்ந்த திரு. எம். ஜெயராசா, Ceylon Monik நிறுவனத்தைச் சேர்ந்த திரு. எம். ராஜேஸ், PRT Sons நிறுவனத்தைச் சேர்ந்த திரு. பி. இராசதுரை, ஆசிரியர் திரு. வி. கேதீஸ்வரன் மற்றும் திருமதி டி. சுதர்ஷினி ஆகியோரும் விசேட அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம், படைப்பாற்றல் மற்றும் கல்விசார் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி, பாடசாலை சமூகத்தினருக்கு மட்டுமன்றி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கும் மாணவர்களின் திறமைகளை அறிந்துகொள்ளும் முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

TMMV EXPO 2026 கண்காட்சியை முன்னிட்டு தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி மற்றும் புத்தாக்கச் செயற்பாடுகளுக்கான சிறப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, திருக்கோவில் கல்வி வலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட தெல்தெனிய கல்வி வலயக் குழுவினர் நேற்று (09) திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தையும் பார்வையிட்டதுடன், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற TMMV EXPO 2026 கல்விக் கண்காட்சியையும் பார்வையிட்டனர்.

குறித்த கல்விக் கண்காட்சி இன்றும் (10) தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

குடியிருப்பு பகுதிக்குள் புகும் யானைகள்; மக்கள் பீதியில்.!

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் தீவிர…

185 0 0
அம்பாறை செய்திகள்

பொலிஸாரின் அதிரடி வேட்டை; ஹெரோயினுடன் சிக்கிய சந்தேக நபர்கள்.!

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை…

178 0 0
அம்பாறை செய்திகள்

அம்பாறையில் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா

தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்திலுள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் நேற்று…

105 0 0
அம்பாறை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில்…

90 0 0