உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 10.09.2026

ராசி பலன்கள் 8 மணி நேரம் முன்
124 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வெற்றிவாகை சூடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பதற்கு கூட இன்று நிறைய வாய்ப்புகள் உள்ளது. இளைஞர்களுக்கு இன்று ரொம்பவும் சாதகமான நாளாக அமையும். இறைவழிபாடு வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன அமைதியைத் தேடி தரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். உங்களுடைய தேவைகள் சரியான நேரத்தில் பூர்த்தியாகும். நீண்ட தூர பயணங்களில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுபசெலவுகள் ஏற்படும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கண்ணியத்தோடு நடந்து கொள்வீர்கள். எந்த இடத்திலும் மனசாட்சிக்கு புறம்பாக எந்த ஒரு வேலையையும் செய்ய மாட்டீர்கள். மனநிறைவு அடைவீர்கள். இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். உங்களுடைய வேலையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடித்து ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுப காரிய தடை விலகும் நாள். வீட்டில் நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த நல்ல காரியங்கள் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். பெற்றவர்களுக்கு மனம் நிறைய சந்தோஷம் இருக்கும். இன்று இறை வழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன பின்னடைவு வந்தாலும் பெருசாக பாதிப்புகள் இருக்காது.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று பக்குவமாக நடந்து கொள்வீர்கள். அனுபவம் வெளிப்படும். சின்னச் சின்ன பிரச்சினைகள், சின்னச் சின்ன கோபம், மனஸ்தாபம் இருந்தாலும் இந்த நாள் நிறைய அனுபவ பாடங்களை கற்றுக் கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்தோடு இருக்க வேண்டும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். உஷாராக இருந்து கொள்ளுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூர பயணங்களில் மூலம் நன்மை நடக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் வராத கடன் வசூல் ஆகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். துணிச்சலாக செயல்படுவீர்கள். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். நீண்ட நாள் பகையிலிருந்து விடுபடுவீர்கள். இதுநாள் வரை தவறாக இருந்த விஷயங்கள் இனிவரும் நாட்களில் சரியாக அமையும். அதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியும் அடையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று இலாப நஷ்ட கணக்கு பார்த்து செயல்படக்கூடிய நாளாக இருக்கும். அதிகப்படியான சிந்தனை இருக்கும். வாழ்க்கை பற்றிய கவலை இருக்கும். கொஞ்சம் உடல் சோர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இறைவழிபாடு செய்யுங்கள். அனாவசியமாக யோசித்து மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபமான நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாகவும் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் இறை வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.‌ ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பமான மனநிலை இருக்கும். புது முடிவு எடுப்பதில் தடுமாற்றம் இருக்கும். சிந்தனை மேலோங்கும். எதிர்காலத்தைப் பற்றிய கவலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்துங்கள். இறைவழிபாடு செய்யுங்கள். எதிர்காலத்தில் நிச்சயம் நல்லது நடக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று சாந்தமாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வீர்கள். அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்வீர்கள். வாழ்க்கை என்றால் என்ன என்பதை அனுபவ ரீதியாக கற்றுக் கொள்வீர்கள். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 09.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நல்ல செய்தி வரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். தேவையில்லாத பிரச்சினையில் இருந்து விடுதலை கிடைக்கும். பயணங்களின் மூலம்…

124 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 08.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியைத் தரும். இன்று முருகர் வழிபாடு செய்து பாருங்கள், உங்கள் பலநாள் கஷ்டத்திற்கு உடனடியாக ஒரு…

133 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 07.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். வேலைகளை சிரமம் பார்க்காமல் செய்யுங்கள். சோம்பேறித்தனம் வேண்டாம்.…

110 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் சின்ன பதட்டம் பயம் இருக்கும். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். இன்று அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்…

81 0 0