உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
23 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிரீஸ் விமானக் கண்காட்சியில் பயங்கர விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

உலக செய்திகள் 2 மாதங்கள் முன்
148 பார்வைகள்

கிரீஸின் தலைநகர் ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள தனாக்ரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற “Athens Flying Week 2026” சர்வதேச விமானக் கண்காட்சியின் போது, கிரேக்க விமானப்படைக்குச் சொந்தமான F-4E Phantom II போர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகளும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று பிற்பகல் 2.55 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில் விமானம் தாழ்வான உயரத்தில் சாகசப் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது திடீரென உயரத்தை இழந்து தரையில் விழுந்து வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் தரையில் மோதியதைத் தொடர்ந்து பாரிய தீப்பரவல் ஏற்பட்டதுடன், வானில் கரும்புகை சூழ்ந்தது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களுடன் விமானங்களும் ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்டன. மீட்புப் பணிகளும் தீப்பரவல் காரணமாக ஆரம்பத்தில் சிரமமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக, விமானக் கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்களிடையே உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. எனினும், விபத்தைத் தொடர்ந்து அன்றைய நிகழ்ச்சியின் எஞ்சிய அனைத்து விமான சாகசங்களும் இரத்து செய்யப்பட்டன.

விமான விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. காரணத்தை கண்டறிய கிரேக்க விமானப்படையினால் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இரு விமானிகளின் உயிரிழப்பைத் தொடர்ந்து கிரேக்க ஆயுதப்படைகளில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

சவூதியிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி…

95 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் கடும் விளைவு : புரட்சிகரக் காவல்படை எச்சரிக்கை!

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் அல்லது படையெடுப்பு நடத்த முயலும் எந்தவொரு நாடும் போரின் நிலப்பரப்பையே மாற்றியமைக்கும் அளவிலான மிகக் கடுமையான பதிலடியைச் சந்திக்க நேரிடும் என…

80 0 0
உலக செய்திகள்

சூடான் இராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயி@ரிழப்பு!

சூடானில் அந்நாட்டு இராணுவத்தினர் பொதுமக்கள் மீது பல ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் இறுதிச் சடங்குகளில் பங்கெடுத்தவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத்…

97 0 0
உலக செய்திகள்

சவூதி விமான நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்!

சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் எட்டு பேர்…

94 0 0