உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

இன்றைய ராசி பலன்கள் – 06.09.2026

ராசி பலன்கள் 3 மணி நேரம் முன்
37 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் சின்ன பதட்டம் பயம் இருக்கும். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். இன்று அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். விடுமுறை நாள் என்பதால் வேலையிலும் வியாபாரத்திலும் பெரிதாக பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். பணத்தை கையாளும்போது கவனம் தேவை.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகள் வெற்றி அடையும். காரிய தடை விலகும். இன்று விநாயகர் வழிபாடு செய்வது உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். தேவையில்லாத பகை விலகும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக அமையும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்கள் கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். புது விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிம்மதியான நாளாக இருக்கும். நல்ல ஓய்வு, நல்ல சாப்பாடு என்று இந்த நாள் மனநிறைவான நாளாக அமையும். இன்று விடுமுறை நாள் என்பதால் பெரிதாக வேலையிலும் வியாபாரத்திலும் பாதிப்புகள் வராது. வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீண் விரைய செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத ஆடம்பர பொருட்கள் வாங்குவதை அறவே தவிர்த்து விடுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இறை நம்பிக்கை உங்களை நல்வழிப்படுத்தும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். துணிச்சலோடு செயல்படுவீர்கள். மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவீர்கள். இதனால் சின்ன சின்ன சங்கடங்கள் வரும். இருந்தாலும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். நல்லது நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் இருக்கும். வராத கடன் வசூல் ஆகும். சொத்து சுகம் வாங்கக்கூடிய முயற்சிகள் வெற்றி அடையும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவான நாளாக இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு சரியாகும். சந்தோஷம் மேலோங்கும். இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். துணிச்சலோடு இருப்பீர்கள். மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவீர்கள். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் நாள். உறவுகளோடு இருந்து வந்த பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வரும். சிக்கல்கள் விலகும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உங்களுடைய ஆசை விருப்பம் நிறைவேறக்கூடிய நாளாக இருக்கும். தேவைகளை சரியான நேரத்தில் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் முன் கோபம் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. உறவுகளோடு பேசும்போது கவனமாக இருக்கவும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். கூடுமானவரை பேசுவதை குறைத்துக் கொண்டாலே பிரச்சினையில் பாதி சரியாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தெளிவான சிந்தனை இருக்கும். பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வை எடுப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும். சுப செலவுகள் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 04.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். ஆன்மீக வழிபாட்டின் மூலம் மனம் நிம்மதி அடையும். தேவையற்ற சங்கடங்கள் நீங்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக் கசப்பு…

62 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று காதுக்கு இனிமை தரும் நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். வெற்றி வாகை சூட கூடிய…

65 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 01.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் இடையூறாக இருந்து வந்த இன்னல்கள் எல்லாம்…

80 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 31.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். பிரமோஷனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சோம்பேறித்தனத்திலிருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய தேவைகளை, தேவையான…

96 0 0