உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 21.08.2026

ராசி பலன்கள் 2 மாதங்கள் முன்
160 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியமான நாளாக இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். இறைவழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மை தரக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் மன நிம்மதி கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைப்பளு கொஞ்சம் அதிகரிக்கும். வீட்டில் ஆன்மீகம் சார்ந்த வழிபாடு சந்தோஷத்தை கொடுக்கும். சுப செலவுகள் ஏற்படும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். நீண்ட நாள் பகை விலகும். மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவீர்கள். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு நீங்கும். ஆன்மீகம் சார்ந்த வழிபாடுகள் மனதிற்கு நிம்மதியை தரும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். நல்லது நடக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியைத் தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு தேவை. நேரத்தை வீணடிக்கக்கூடாது. உறவுகளோடு பேசும்போது கவனமாக பேசுங்கள். அனாவசியமாக பேசுவதை குறைத்து கொண்டால் மேலும் நல்லது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். முதலீட்டில் கவனமாக இருங்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பு வெளிப்படும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் வேலைப்பளு அதிகரிக்கும். விருந்தாளிகளின் வருகையால் வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சாதனை படைக்கக் கூடிய நாளாக இருக்கும். மாணவர்களுக்கு இளைஞர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கப் போகிறது. புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். காரியத்தடை விலகும். தேவையில்லாத செலவுகள் குறையும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். தொலைநோக்கு பார்வை அதிகரிக்கும். எதிர்காலத்திற்கு தேவையான விஷயங்களை இன்று பார்த்து பார்த்து செய்யலாம். சேமிப்பை உயர்த்தலாம். நல்லதே நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இறை நம்பிக்கை அதிகரிக்கும். இறைவழிபாட்டில் கலந்து கொள்ளக்கூடிய நல்ல வாய்ப்புகள் வரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும் தேவையில்லாத டென்ஷன் குறையும். எதிரி பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் தேவை.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தேவையில்லாத டென்ஷன் குறையும். எதிரி தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். புது நண்பர்களின் அறிமுகம் மனதிற்கு இதமான அனுபவத்தை கொடுக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும் சுப செலவுகள் ஏற்படும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த வழிபாடுகளின் மூலம் மனது அமைதி அடையும். முன்கோபம் குறையும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். வேலையில் முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக இருப்பீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

51 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0