உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 19.08.2026

ராசி பலன்கள் 2 மாதங்கள் முன்
119 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும். மனநிறைவோடு இந்த நாள் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்லது நடக்கும்.

ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். வீண் விரைய செலவுகள் குறையும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு மருந்து மாத்திரை சாப்பிடக்கூடிய பிரச்சினைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். சுறுசுறுப்பு வெளிப்படும். நீண்ட நாள் செய்ய முடியாத வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். இளைஞர்கள் மாணவர்களுக்கு இன்று எதிர்பாராத நல்லது காத்துக் கொண்டிருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் உங்களுக்கான நல்ல இடம் கிடைக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். வியாபாரத்தை பொறுத்தவரை நிதானம் தேவை. கடன் கொடுக்கும் வழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தேவையில்லாத தகராறுகள் பஞ்சாயத்துகள் ஒரு முடிவுக்கு வரும். புது வாடிக்கையாளர்களின் வருகையால் மன நிம்மதி அடைவீர்கள். வேலையில் சின்னச் சின்ன பிரச்சினைகள் அவ்வப்போது வந்து போனாலும், உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். திறமை வெளிப்படும். வசீகரத் தோற்றத்தால் அனைவரையும் கவரக்கூடிய அளவுக்கு இன்று நல்லது நடக்கும். தேவையில்லாத பகை விலகும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும். தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனது ஒரு நிலையாக இருக்காது. தேவையில்லாத சலனம் உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். மனதை ஒரு நிலைப்படுத்துங்கள். இறை நம்பிக்கை உங்களை நல்வழிப்படுத்தும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தேவையில்லாத டென்ஷன் குறையும். வியாபாரத்தில் புது நம்பிக்கை பிறக்கும். நஷ்டங்கள் எல்லாம் இலாபமாக மாறும். வேலையில் தொந்தரவாக இருந்து வந்த சில விஷயங்கள் இன்று சரியாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் தவறான புரிதல்கள் சரியாகும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். புது முடிவுகள் எடுக்கும் போது ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை. நேரத்தை வீணடிக்க கூடாது. அதிக நேரம் கைபேசி பயன்படுத்த வேண்டாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கவனக்குறைவால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மாணவர்கள் என்று கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். படிப்பில் அலட்சியம் வேண்டாம். வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். உங்களுடைய வேலையை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்திலும் நிதானம் இருக்க வேண்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன மகிழ்ச்சி இரட்டிப்பாக இருக்கும். மனதிற்கு பிடித்த நபருடன் நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தை பொறுத்தவரை நிதானம் தேவை. பேராசை வேண்டாம். வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சோர்வான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்காது. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

55 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0